
லியோ விமர்சனம் :
குடும்பத்திற்காக எதையும் செய்யக்கூடிய விஜய்...
கடந்ததை நிகழ் காலத்தில் கொண்டு வரக்கூடாது..!
கதை சுருக்கம்:- விஜயின் தந்தை மற்றும் விஜயின் சித்தப்பா போதைப் பொருள் வியாபாரம் செய்து வருவார்கள். ஆனால் உலகை பொருத்தவரை அவர்கள் புகையிலை வியாபாரிகள். ஆண்டனி தாஸின் மகன் லியோ(விஜய் )தான் போதைப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வார். புகையிலை ஃபேக்டரியில் factory ஏற்படும் தீ விபத்தில் லியோ இறந்துவிடுவார். இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்து இமாச்சல பிரதேசத்தில் மனைவி சத்யா(த்ரிஷா), இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் பார்த்திபன்(விஜய்) குறித்து தாஸ் சகோதரர்களுக்கு தெரிய வரும்.

பார்த்திபனின் புகைப்படத்தை பார்த்த தாஸ் சகோதரர்களோ லியோ சாகவில்லை என்று முடிவு செய்வார்கள். லியோ தான் பார்த்திபனா, இல்லை ஒரே மாதிரி இருக்கும் இரண்டு பேரை தவறாக புரிந்து கொள்கிறார்களா என்பதே கதை.
லியோ படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகள் இருந்தாலும் அது விஜய்யின் ஒன் மேன் ஷோவாக இருக்கிறது. லியோ மற்றும் பார்த்திபனாக சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய்.
இவர் நிஜமாகவே பார்த்திபன் தானா இல்லை ஒரு வேளை லியா தான் டபுள் கேம் ஆடுகிறாரா என கிளைமாக்ஸ் காட்சி வரை நம்மை யோசிக்க வைக்கிறார். கடைசி நிமிடம் வரை இருக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.
மொத்தத்தில் லியோ படம் ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட்டா இருக்கும்
