
மரியா திரை விமர்சனம்
கதை சுருக்கம் :
கதையின் நாயகியாக நடித்த சாய்ஸ்ரீ பிரபாகரன், கிறிஸ்துவ மதத்தின் முக்கியமாக சொல்ல கூடிய சன்னியாஸ்திரியாக என்ற முக்கிய கதாபாத்திரத்தில், சிறு வயது முதல் கடவுளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து வந்த சாய்ஸ்ரீ. ஒருநாள் விடுமுறையாக உறவினர் வீட்டிற்கு வருகிறார், அப்போது அவருடைய சக நண்பர்கள் வாழும் சராசரியான வாழ்க்கையை பார்த்து மிகவும் ஏக்கத்துடன் பார்த்து தானும் இந்த வாழ்க்கையை வாழனும் என்ற முடிவுக்கு வருகிறார் என்பது தான் படத்தின் சுருக்கம்
கதை பாகங்களாக பிரிவுகளாக திரையிட படுகிறது!
நாயகி தனது சக நண்பர்களோடு இருக்கும்போது ஒருநாள் அவருடைய நண்பன் இரவில் அவளோட ரூம்க்கு தண்ணீர் கேட்க போகும்போது இருவருக்கும் காமம் தூண்டுதல் ஏற்பட்டு நாயகி தவறு செய்ய ஏற்படுகிறது, இந்த தவறை அவள் ஊருக்கு சென்று அவருடைய அம்மாகிட்ட தன்மீது ஒரு ஆண் விறல் பட்டுவிட்டது இனி நான் சன்யாசியாக போக மாட்டேன் எனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னவுடன். அவருடைய அம்மா வீட்டைவிட்டு துரத்தப்படுகிறாள், மீண்டும் அவள் தான் இருந்த அதே நண்பர்களோடு வீட்டுக்கு திரும்ப வந்துவிட்டால், அவளிடம் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன அவள் சுதந்திரமாக இருக்க வேறு என்ன என்று தெரிந்துகொள்ள அவளுக்கு சாத்தானின் அழைப்பு ஏற்படுகின்றது. அடுத்து என்ன ஆகும் என்பதுதான் மீதி கதை
படத்தின் இசை அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் டைலாக் இல்லாத நேரத்தில் கூட இசை கை கொடுத்தது என்று சொல்லலாம்,
ஒளிப்பதிவு அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் மிக நேர்த்தியாகவும் எதை காட்டணும் எதை காட்ட கூடாது என்பதை தெளிவாக காட்டியுள்ளனர்.
இயக்குநர் ஹரி கே.சுதன் மதத்தின் பெயரில் விருப்பம் இல்லா ஒரு பெண்ணின் அவளின் உணர்வுகளை பேசும் படமாக இருப்பது இல்லாமல், கிறிஸ்துவத்தில் சாத்தன் பங்கு என்பது வெளிச்சம் போட்டு காட்டிருக்குறார் இயக்குனர்,
Star Rating