
ரத்த காட்டேரி என்று சொல்லக்கூடிய ஒரு வகையான அமானுஷய சக்தி படைத்த புதுவகையான அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். பேக்கரி ஒன்றில் பணியாற்றும் அவர் தங்கியிருக்கும அடிக்குமாடி குடியிருப்புக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசிக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் அவரால் ஈர்க்கப்படுகிறார்கள். அதே சமயம், மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடும் கும்பலால் பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன், கல்யாணி பிரியர்தர்ஷன் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், கல்யாணி பிரியர்தஷன் அதீத சக்திகள் கொண்ட பெண் மட்டும் அல்ல, அதற்கும் மேல…என்ற உண்மை தெரிய வருகிறது. அவர் யார் ? அவரைப் பற்றிய உண்மை தெரிந்த பிறகு என்ன நடந்தது ? என்பதை நம் புராணக் கதைக கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கும் வகையில் சொல்வதே ’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’.
சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அதீத சக்திகள் படைத்த பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார். அதிகம் பேசவில்லை என்றாலும், தனது அளவான உடல் அசைவுகள் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தியிருப்பவர், தனது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் கொண்டாடும் விதத்தில் நடித்திருக்கிறார்.
சந்திராவால் கவர்ந்திழுக்கப்படும் இளைஞர்களாக நடித்திருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் மூலம் கதை நகர்த்தப்படுவதோடு, அவர்களது உரையாடல் மற்றும் உடல் மொழி ஆகியவை பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது. குறிப்பாக, சந்திராவை பின் தொடர்ந்து, அவர் யார் ? என்பதை நேரில் பார்க்கும் நஸ்லனின் நடிப்பு சிரிப்பு சரவெடி.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டியின் வில்லத்தனம் மிரள வைக்கிறது.
சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும் திரையில் தோன்றாத பெரியவர் கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் திரைக்கதையில் கையாளப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கோணங்கள் மற்றும் வண்ணங்கள் படத்தை பிரமாண்டமானதாக மட்டும் இன்றி தரமானதாகவும் கொடுத்திருக்கிறது.
படத்தின் துவக்கத்தில் என்ன நடக்கிறது, என்பது சற்று புரியாதபடி இருந்தாலும், சந்திரா யார் ? என்பதை மிக தெளிவாக சொல்லி, சூப்பர் மேன் உலகம், அதில் இருக்கும் அதீத சக்தி படைத்தவர்கள், என்று படத்தில் ஏகப்பட்ட விசயங்கள் இருந்தாலும், அனைத்தையும் சுருக்கமாக சொல்லி படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ.
Casting : Kalyani Priyadarshan, Naslen, Chandu Salimkumar, Arun Kurian, Sandy
Directed By : Dominic Arun
Music By : Jakes Bejoy
Produced By : Wayfarer Films –
