சிறை படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி” பாடல் வெளியானது

யுவன் சங்கர் ராஜா குரலில், ஜஸ்டின் பிரபாகர் இசையில், வெளியிட்ட சிறை படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி” பாடல் வெளியானது

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி” பாடல் சென்னை VIT கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் திரை ஆர்வலர்களிடையேயும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது

தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “மின்னு வட்டம் பூச்சி” பாடல் இன்று VIT கல்லூரியில் பிரத்தியோகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இப்பட பாடல் வெளியிட்டப்பட்டது.

யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை இளங்காற்றல் வருடும் இந்த ” மின்னு வட்டம் பூச்சி” பாடலை கேட்டவுடன் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் அருமையான மெலடியாக உருவாகியுள்ள இப்பாடலை, பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மற்றும் பத்மஜா ஶ்ரீனிவாசன் இப்பாடலை பாடியுள்ளனர்.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post STUDY IN MALAYSIA OPENS DOORS TO HIGHER EDUCATION FOR INDIAN STUDENTS
Next post கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா
Close
%d bloggers like this: