
விஜய் நடித்த ‘சச்சின்’ படம் கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார்.

இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் போதுமான அளவில் மீண்டும் படத்தினை ரசித்து பார்த்தனர் தளபதி விஜய் படம் என்றாலே மக்கள் திரும்ப திரும்ப பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள் அதிலும் வடிவேலு படத்தில் அல்டிமேட் பண்ணிருக்காரு காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் படத்திற்கு மென்மேலும் அழகு சேர்த்து இன்னும் வலுவடைய செய்தது
இன்று வரை இப்படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகளும், நகைச்சுவை காட்சிகளும் மற்றும் டி எஸ் பியின் பாடல்களும் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்துள்ளது. ஆம், கடந்த 18ம் ஆண்டு சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.
Star Rating
