அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான “ரங்கோலி” திரைப்படம் !!

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான “ரங்கோலி” திரைப்படம் !!

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

அமேசான் ப்ரைம் தளத்தில் வரவேற்பைக் குவிக்கும் “ரங்கோலி” திரைப்படம் !!

பள்ளி மாணவனின் வாழ்வினை எளிமையான கதையில் அழகாகச் சொல்லிய “ரங்கோலி” திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக வெளியான திரைப்படம் “ரங்கோலி”.

திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் 24 அக்டோபர் 2023 அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. அனைவரின் பள்ளி ஞாபகங்களைக் கிளறும் இப்படம் குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருவதுடன், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளைப் பெற்று வருகிறது.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியிலிருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை.
பள்ளி மாணவர்களின் வாழ்வை மட்டுமல்லாது ஒரு எளிமையான குடும்பத்தின் வாழ்வியலையும் அழகாக இந்தப்படம் சொல்கிறது.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார்.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார்.

பள்ளிக்கால வாழ்க்கையை அற்புதமாகச் சொல்லும் இந்த அழகான டிராமா திரைப்படத்தினை அமேசான் ப்ரைம் தளத்தில் கண்டுகளியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post அடப்பாவிங்கள எதுக்கெல்லாம் ஜெய் ஸ்ரீராம் சொல்லணும்னு அவஸ்தியே இல்லையா kalanithi veerasamy Latest
Next post லேகே பிரபு கா நாம்” பாடலுக்கு கிடைத்த அன்பான வரவேற்பால் சல்மான் கான் – கத்ரீனா கைப் உற்சாகம்
Close
%d bloggers like this: