
விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் தலைமை
நடிகர் விஜய் சேதுபதி தலைமையிலான அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பி. பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள கடிதத்தில், பி. பிரசாத்தின் சிறப்பான செயல்பாடு, அமைப்பின் மீதான ஈடுபாடு, நிர்வாகத் திறன் மற்றும் பங்களிப்பை கருத்தில் கொண்டு, அவரை நற்பணி இயக்கத்தின் Chief Coordinator (தலைமை ஒருங்கிணைப்பாளர்) பொறுப்பில் நியமிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல், மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அமைப்புப் பணிகளை வழிநடத்துதல், புதிய நிர்வாகிகளை உருவாக்குதல், உறுப்பினர் சேர்க்கையை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை பி. பிரசாத் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்றத்தின் அனைத்து அமைப்பு சார்ந்த செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, அமைப்பின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒற்றுமையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரசிகர் மன்றத்தின் வளர்ச்சிக்கும் சிறப்பிற்கும் முழுமையான பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள விஜய் சேதுபதி, புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு மேலும் பலம் சேர்ப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
22-09-2026 தேதியிட்ட இந்த நியமனக் கடிதம், விஜய் சேதுபதியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
