
எஸ்ஆர்எம் ராமாபுரம் கல்வி வளாகத்தின் உலக சாதனை முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்த ஃபேஷன் மற்றும் ஆடை மறுசுழற்சியை ஊக்குவிக்கும் நிகழ்வு
• 700 கிலோ பழைய ஆடைகளுக்குப் புதுவாழ்வு அளிக்கும் வகையில், 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து 7,000 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட துணிப் பின்னலை உருவாக்கியுள்ளனர்.
• பைகள் மற்றும் பாய்கள் போன்ற பொருட்களை தயாரிக்க இந்தத் துணிப் பின்னல் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
சென்னை, அக்டோபர் 22, 2026: சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைப் பயன்பாடு மற்றும் பழைய ஆடைகளை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஒரு விழிப்புணர்வு முன்னெடுப்பாக தனது மாணவர்களைக் கொண்டு இந்த உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளது. 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து, குப்பைக் கிடங்குகளில் வீசப்பட்ட சுமார் 700 கிலோ பழைய ஆடைகளை பயன்படுத்தி 7,000 மீட்டர் நீளமுள்ள துணிப் பின்னலை உருவாக்கியுள்ளனர். பழைய பொருட்களை மறுசுழற்சியின் மூலம் ஆக்கப்பூர்வமாக மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதையும் மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும் என்பதையும் இது உணர்த்துகிறது.
உலக சாதனைக்கான இந்த முயற்சியானது, யூத் யுனைடெட் கவுன்சில் ஆஃப் இந்தியா (யுகே) தலைவரும் உலக யூத் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இயக்குனருமான திருமதி. லோட்டி ஹில், யூத் யுனைடெட் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் திரு. ஆர். விமல், ‘கூன்ஞ்’ (Goonj) அமைப்பின் பிரதிநிதி திருமதி. அனிஷா, வழக்கறிஞர் திருமதி. மிருதுளா ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இளைஞர் மேம்பாடு, சர்வதேச கூட்டாண்மைகள், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நிலையான முன்னேற்றத்தின் மீது ஆர்வமும், அக்கறையும் கொண்ட பல பிரபல ஆளுமைகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
எஸ்.ஆர்.எம் ஃபேஷன் டிசைனிங் (ஆடை வடிவமைப்பு) துறை, லிபரல் ஆர்ட்ஸ் மற்றும் வணிகக் கல்விப் புலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து இந்தத் துணிப் பின்னலை உருவாக்கினர். உலகளவில் அதிகரித்து வரும் துணிக் கழிவுகளைக் குறைப்பதில் மாணவர்களின் ஒருங்கிணைந்த குழுப்பணியையும், படைப்பாற்றலையும் ஆதாரவளங்களை சிறப்பாக பயன்படுத்தும் திறனையும் இது எடுத்துக்காட்டுகிறது. உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் துணிப் பின்னல், சமூக மேம்பாடு மற்றும் மற்றும் பொருட்களின் மறுசுழற்சியை ஊக்குவிக்கும் குறிக்கோளோடு இயங்கும் ‘கூன்ஞ்’ (Goonj) என்ற தேசிய அளவிலான தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும். அவர்கள் இதைப் பயன்படுத்தி பைகள், பாய்கள் போன்ற சமூகத்திற்கு பயனுள்ள பொருட்களைத் தயாரிப்பார்கள். இதன் மூலம் பயனற்றதாக தூக்கி எறியப்படும் துணிகளை பயன்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் சாத்தியம் இருப்பதை இது முன்னிலைப்படுத்துகிறது.
துணிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஒரு துணியின் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிப்பதும் இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும். பழைய ஆடைகளை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் வளங்களைச் சேமிக்க இயலும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி பொறுப்பான நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நிகழ்வாகவும் இது அமைந்தது. இந்தச் செயல்முறையின் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு உதவுகிற ஆடைகளின் பயன்பாடு குறித்து மாணவர்கள் நேரடி அனுபவத்தைப் பெற்றனர். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிமனித மற்றும் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை அவர்கள் ஆழமாக உணர்வதற்கும் இது வழிவகுத்தது. துணிக் கழிவுகளைக் குறைப்பதிலும், விழிப்புணர்வுடன் கூடிய ஆடைத் தேர்வுகளை ஊக்குவிப்பதிலும் வருங்கால ஆடை வடிவமைப்பாளர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதையும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.
இந்தச் செயல்முறை மூலம், கழிவுகளைக் குறைப்பதில் புதிய ஆடை வடிவமைப்பாளர்களின் பங்கு என்ன என்பதையும் மாணவர்கள் நடைமுறையில் கற்றுக்கொண்டனர். இந்த முன்னெடுப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (குறிப்பாக SDG 11, 12, 13 மற்றும் 17) ஏற்ப அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகளை ஒன்றிணைத்த இந்த நிகழ்வு, கூட்டு முயற்சி, ஆடை வடிவமைப்புத் திறன் மற்றும் புதுமையான சிந்தனைகள் மூலம் சுற்றுச்சூழல் சவால்களை எவ்வாறு திறம்பட எதிர்கொள்ளலாம் என்பதைச் சிறப்பாக உணர்த்தியதுடன் , சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் ஆடை வடிவமைப்பாளர்களாக மாணவர்களை உருவாக்குவதில் இப்பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது. இளைஞர்களிடையே விழிப்புணர்வு, குழுப்பணி மற்றும் புதுமையான சிந்தனையை வளர்த்து, ஆடை மறுசுழற்சி குறித்த புரிதலை ஏற்படுத்த இது ஒரு சிறந்த தளமாக அமையும்.
சென்னை ராமாபுரம் மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார் அவர்கள் கூறியதாவது: “கல்வி என்பது வெறும் வகுப்பறையோடு முடிந்துவிடக் கூடாது என்பதில் எஸ்.ஆர்.எம் மிகவும் உறுதியாக உள்ளது. சமூகத்தில் ஒரு சிறப்பான மாற்றத்தை உருவாக்க மாணவர்களைத் தயார்படுத்தும் எல்லா முயற்சிகளையும் நாங்கள் முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறோம். எங்களின் இந்த உலக சாதனை முயற்சியானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய சிந்தனை மற்றும் வளங்களைச் சரியாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மீதான எங்கள் அக்கறையைப் பிரதிபலிக்கிறது.
பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்பட்ட பழைய துணிகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாக மாற்றியதன் மூலம், மாணவர்களின் படைப்பாக்கல் திறனும் கூட்டு முயற்சியும் எப்படி ஒரு பசுமையான, வளமான எதிர்காலத்திற்குப் பெரிதும் உதவும் என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். மாணவர்களின் இந்தச் செயலையும் ஆர்வத்தையும் எண்ணி நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களின் இந்த முன்னெடுப்பு, மேலும் பல இளைய சமுதாயத்தினரை இயற்கைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உகந்த பழக்கங்களைக் கடைப்பிடிக்கவும், சமூகத்திற்குப் பொறுப்புள்ளவர்களாக மாறவும் ஊக்கப்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
