லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடல் வெளியீடு லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்வகதாஞ்சலி…’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் + காமெடி + ஹாரர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் வேட்டையனாக தோன்றும் ராகவா லாரன்ஸின் கேரக்டர் லுக்கும், சந்திரமுகியாக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் கேரக்டர் லுக்கும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஸ்வகதாஞ்சலி …’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் சைதன்ய பிரசாத் எழுத, பின்னணி பாடகி ஸ்ரீநிதி திருமலா பாடியிருக்கிறார். இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் ஆடும் நடனத்தை டான்ஸ் மாஸ்டர் கலா வடிவமைத்திருக்கிறார். இந்தப் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் இணையத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா- ராகவா லாரன்ஸ்- கங்கணா ரணாவத்- பி வாசு -எம். எம். கீரவாணி கூட்டணியில் தயாராகி, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. https://youtu.be/CgQamR5tXjU
More Stories
சென்னையில் நடைபெற்ற ILWF INDIA – இந்திய சாதனையாளர் விருதுகள் 2026 விழா
சென்னையில் நடைபெற்ற ILWF INDIA – இந்திய சாதனையாளர் விருதுகள் 2026 விழா – தலைமை விருந்தினராக நடிகர் கதிரவன் பங்கேற்புசென்னை, ஆகஸ்ட் 30, 2026:சென்னை அரும்பாக்கம்...
சசிகுமார் நடிப்பில் பிரைம் வீடியோவின் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேசன் திரில்லர்
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும்...
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா! KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது...
நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு
திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !! புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில்,...
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு! மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் கதைக்கான உள்ளடக்கத்தை மையப்படுத்தப்பட்ட தரமான...
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
‘2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!! இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கிய...
