வினோத் சென்னியப்பன் தயாரிப்பில் ஏ எம் ஆர் முருகேஷ் இயக்கத்தில் வினொத்கிஷன் அபிராமி வெங்கடாசலம் ஆதித்யா பாஸ்கர் அம்மு அபிராமி டெல்லிகணேஷ் லீலா சாம்சன் மற்றும் பலர் நடித்துள்ள படம் வான் மூன்று. இசை r2bros ஒளிப்பதிவு சார்லஸ் தாமஸ்

கதை
காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆதித்யா பாஸ்கர் அம்மு அபிராமிக்கு ஏற்படும் காதல் ஒரு
வானம் ஒன்று

40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், டெல்லி கணேஷ் லீலா சாம்சன் ஜொடி இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழும் வினோத் கிஷன் அபிராமி வெங்கடாசலம்ஜோடி . அபிராமி வெங்கடாசலத்துக்கு மூளை பாதிப்பு ஏற்பட இவர்கள் படும் அவஸ்தை
மூன்றாம் வானம்.

இந்த முன்று கதைகளிலும் என்ன நடக்கிறது என்பதே வான் மூன்று கதை.
வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம் டெல்லி கணேஷ் லீலா சாம்சன்
அம்மு அபிராமி ஆதித்யா பாஸாகர் என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.
சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவும் R2bros –ன் இசையும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. வினோத் சென்னியப்பன் தயாரித்திருக்கிறார். இயக்குநர் ஏ.எம்.ஆர் முருகேஷ் மூன்று ஜோடிகளின் வாழ்க்கை பதிவை அழகாக எல்லோரும் ரசிக்கும்படி பீல்குட் மூவியாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்
