
கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சுதீப் அதிரடி நடிப்பில் விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாக்ஸ் !! மாஸ் ஹீரோ இன்ஸ்பெக்டர் சுதீப் ட்ரான்பர் ஆகி ஒரு புது ஸ்டேஷனில் டூட்டிக்கு ஜாயின் செய்கிறார். டூட்டிக்கு முன்பே அரசியல் பிரபலம் மகன்கள் தாறுமாறாக கார் ஓட்டி போலிஸாரிடம் சண்டை போடுவதை பார்த்து சுதீப் அதிரடி கைது செய்கிறார்.
ஆனால் போலிஸ் ஸ்டேஷனில் இருந்த அந்த இரு கைதிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி போலிஸ் துப்பாக்கியால் சுட்டு இறந்து விடுகின்றனர். போலீஸ் மேல் விழும் இந்த பழியில் இருந்து சுதீப் எவ்வாறு பல பிரச்சனைகளை தாண்டி தன்னை நிரூபிக்கிறார் என்பது தான் மீதி கதை.
அரசியல் அடியாட்கள் மற்றும் கேங்ஸ்டர்கள் என எல்லா பக்கமும் வரும் பிரச்சனைகளை எப்படி டீல் செய்கிறார் என்று பார்த்தால், சூப்பர் ஹீரோவை எல்லாம் மிஞ்சும் சாகசம் தான், அவருடைய ரசிகர்களுக்கும் மாஸ் பட விரும்பிகளுக்கும் செம விருந்து தான்.
