
கதைக்களம்: இயக்குனர் உபேந்திரா இந்த படத்தை எதனை கருத்தில் கொண்டு எடுத்துள்ளார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்தது”UI என்பது ஒரு சிக்கலான, ஆழ்மனப் போர், அது இன்றைய உலகை அழிவின் பாதைக்கு அழைத்து கொண்டு செல்கிறது என்பதை உபேந்திரா உண்மையிலேயே வித்தியாசமான ஒன்றை நமக்கு தெரிய படுத்த முயற்சித்திருக்கிறார். மேலும், படத்தின் பின்னணி இசை, காட்சிகள்,தொழில்நுட்ப அம்சங்கள் என ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் வகையில் உள்ளன. ஆனால் நாம் தலைவலியோடு பார்க்க வேண்டியது இருக்கும்.
இரண்டாம் பாதியில் சொதப்பல்: இந்த படம் வழக்கமான படம் போல இல்லை, இது வெகுஜன மக்களுக்கு பிடிக்குமா என்பது சந்தேகம் தான். படத்தை எரிச்சல் அடையாமல் அமர்ந்து பார்ப்பது சற்று கடினம் தான். ஆனால், ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் படத்தை எடுத்துள்ளார் உபேந்திரா. வலுவான கதைக்களத்துடன் ஆரம்பிக்கும் படம் இரண்டாம் பாதியில் கதை அதன் பிடியை இழந்து வேறு ஒரு திரையில் செல்கிறது. ஆனால், படத்தில் இடம் பெற்ற வீடுகள், காஸ்ட்யூம்கள் என அனைத்தும் வேறு ஒரு விஷயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது என படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் இந்த படம் வெறுப்பு படமாக இருக்கும்
Star Rating