
LSS – Love Share Subscribe Movie Review
JB ஃபிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் வழங்க, ரகு தயாரிப்பில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன் அத்வானி, படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன் நடிப்பில் மஹாலக்ஷ்மி முருகன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் (லைக் ஷேர் சப்ஸ்கிரைப் ) படம்.
சென்னை சவுகார்பேட்டையில் பணக்கார சேட் வீட்டுப் பெண் அவள் (சிம்ரன் அத்வானி). அம்மா சிறு வயதிலேயே அப்பாவை வெறுத்து தன்னையும் மறந்து வேறொருவருடன் போய்விட்ட நிலையில் பாட்டியுடன் தனியாக இருப்பவள் அவள். அப்பா ஒரு வியாபார காந்தம்.
கல்லூரியில் உடன் படிக்கும் மேற்படி இளைஞன், தன் தாய் (வினோதினி) தந்தை ஆகியோருடன் பாசமாக இருப்பதை அறிந்து அவனைக் காதலிக்கிறாள் அவள் . பையன் வீட்டில் காதலுக்கு சம்மதம். பெண்ணின் அப்பா ஸ்டேட்டஸ் குறைபாடு காரணமாக மறுக்கிறார்.
ஆனால் அவளுக்கு காதலனை பிரிய மனமில்லை. காசியில் இருக்கும் அம்மாவை போய் பார்த்து காதலை சொல்லி ஆசி வாங்கி வர, அப்பாவுக்கு தெரியாமல் கிளம்புகிறாள். கூடவே காதலனும்.
காசி வந்த நிலையில் அம்மா அவளை மட்டும் வரச் சொல்ல அவளும் போய் அம்மாவை சந்திக்கிறாள். பேசிவிட்டு வரும் வழியில் அவளுக்கு ஒரு விபத்து .
போன காதலியைத் தேடி காதலன் அலைய, ஊரில் இருந்து பணக்கார அப்பா அவரது வஞ்சக நண்பர் ஒருவர் ஆகியோர் வர, அவர்கள் காதலனை சந்தேகப்பட்டு, பண பலத்தால் போலீஸ் மூலம் பிளக்க,
காதலி என்ன ஆனாள். காதலன் என்ன ஆனான்? காதல் என்ன ஆனது என்பதே இந்த LSS (லைக் ஷேர் சப்ஸ்கிரைப் )படம்.
