வெற்றிக் கழக கொடியேறுது!! பாடல் வரிகள்

ஹே……………….
வரமே.. வரமே.. வா வா நிஜமே…
கொடியே.. கொடியே.. காக்கும் கொடியே…
தலைவா.. தலைவா.. காவல் தர வா…

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

வெற்றிக் கழக கொடியேறுது
நம்ம சனத்தின் விதி மாறுது
வெற்றிக் கழக கொடியேறுது
மக்கள் ஆச நிஜமாகுது (2)

தமிழன் கொடி பறக்குது
தலைவன் யுகம் பொறக்குது
மூன்றெழுத்து மந்திரத்தை
மீண்டும் காலம் ஒலிக்குது (2)

சிறுசும் பெருசும் ரசிக்குது
சிங்கப்பெண்கள் சிரிக்குது
மக்களோட தொப்புள் கொடியில்
மொளச்ச கொடியும் பறக்குது

மனசில் மக்கள வைக்கும்
தலைவன் வரும் நேரமிது
மக்களும் அவன மனசில் வச்சு
ஆடிப்பாடி கூப்பிடுது

சிகரம் கெடச்ச பின்னும்
எறங்கி வந்து சேவ செஞ்சு
நீங்க குடுத்த எல்லாத்துக்கும்
நன்றி காட்டும் காலமிது

தமிழா தமிழா
நம்ம வாழப்போறோமே
ஒரு கறை இல்லாத கையப்புடிச்சு
போகப் போறோமே (2)

தமிழன் கொடி தலைவன் கொடி
தருமக்கொடி தரையின் கொடி
வீரக்கொடி விஜயக்கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி..! ஹே (2)

ரத்த செவப்பில் நெறமெடுத்தோம்
ரெட்ட யான பலம் கொடுத்தோம்
நரம்பில் ஓடும் தமிழுணர்வ
உருவிக் கொடியின் உருக்கொடுத்தோம்

மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்
பச்ச நீல திலகம் வச்சோம்
பரிதவிக்கும் மக்கள் பக்கம்
சிங்கம் வர்றத பறையடிச்சோம்

தூரம் நின்னு பாக்கும் தலைவன்
காலமெல்லாம் மாறுது
தோளில் வந்து கையப் போடும்
தலைவன் கொடி ஏறுது

அரசர கேள்வி கேட்கும்
தளபதியின் காலமடி
அன்னைக்கே சொன்னோமே
இது ஆளப்போற தமிழன் கொடி!

ஹே தமிழன் கொடி! தலைவன் கொடி!
தருமக்கொடி! தரையின் கொடி!
வீரக்கொடி! விஜயக்கொடி!
ஆதிக்குடிய காக்கும் கொடி!!

தமிழன் கொடி! தலைவன் கொடி!
தருமக்கொடி! தரையின் கொடி!
வீரக்கொடி! வெற்றிவாகை சூட போற
விஜயக்கொடி! மக்கள் கொடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

chennai express news Previous post Ajith Kumar’s Vidaamuyarchi Update!! Revealing Ganesh & Dasrathi!
Next post Vazhai Movie Update
Close
%d bloggers like this: