
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவை ஒட்டி, இசையமைப்பாளர் தேவா மலேசியாவிலிருந்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, எங்கள் ஆன்மீக குரு மற்றும் அம்மா என்று எங்களால் அன்போடு அழைக்கப்படும் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தியின் ஓம்காரத்தில் கலந்து விட்டார் என்பதை அறிந்ததும் என் மனம் மிகவும் வேதனையில் இருக்கிறது. அம்மாவின் ஆசிர்வாதம் நம் அனைவரின் வாழ்விலும் என்றும் இருக்கிறது. ஓம் சக்தி.
மேலும் அண்மை செய்திகளுக்கு எங்களோடு இணைந்திருங்கள். www.chennaiexpress.org
