
திரைவிமர்சனம் : மார்கன் !
தெகிடி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய லியோ ஜான்பால் மார்கன் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். விஜய் ஆன்டனி மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இரண்டாம் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் அஜய் தீஷன். சமுத்திரக்கனி, பிரிஜிதா, தீப்ஷிகா, மகாநதி ஷங்கர், வினோத் சாகர் உள்ளிட்ட பலர்
நடித்துள்ள க்ரைம் விசாரணை படமாக வந்துள்ளது. இரவில் ஒரு பெண் ஊசி ஒன்றை மட்டும் போட்டு உடல் முழுக்க கருக வைத்து கொலை செய்யப்படுகிறாள். இதே போல் கதாநாயகன் விஜய் ஆன்டனியும் பாதிக்கப்பட்டதால் தானாக வந்து வழக்கை விசாரிக்கிறார். இதில் அஜய் சம்மந்தப்பட்டிருப்பார் என்று நினைக்கும் போது கதை வேறு கோணத்தில் விரிகிறது. இறுதியில் அஜயை வைத்தே கொலைகாரனை பிடிப்பது தான் திரைப்படத்தின் கிளைமாக்ஸ்.
