
திரை விமர்சனம் : குட் டே !
பூர்ணா ஜே.எஸ். மைக்கேல் எழுதி என். அரவிந்தன் இயக்கிய திரைப்படம் குட் டே. இந்தப் படத்தை பிருத்விராஜ் ராமலிங்கம் தனது நியூ மாங்க் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார், இதில் பிருத்விராஜ் ராமலிங்கம், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கதை என்பதை விட, ஒரு சாமானியனின் போதை இரவில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் வழியாக அவனது குணமும் வாழ்க்கையும் சுயசரிதைபோல் விரித்துக் காட்டப்படுவதுதான் படம். திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றின் இடைநிலைத் தொழிலாளி சாந்தகுமார். பணியிடத்தில் மேலாளரால் ஏற்படும் அவமானம், மனைவியின் வசை, வீட்டு உரிமையாளர் போலீஸில் கொடுக்கும் புகார் உள்பட பல அழுத்தங்கள் அவரைத் தாக்குகின்றன. அவற்றிலிருந்து தப்பிக்க, மதுவை நாடும் அவர், நிலைகொள்ளாத போதையில் செய்யும் செயல்கள், அவரின் அன்றைய இரவில் பல எதிர் விளைவுகளைக் கொண்டு வருகின்றன. அந்த இரவு முடியும்போது அவர் என்னவாகிறார் என்பது கதை.
Loosely based on acclaimed lyricist @iamKarthikNetha’s life
Produced by #NewMonkPictures
