மீடியாதுறையினரை கவுரவிக்க விருது
பெங்களூரில் அக்டோபர் 23ல் பிரமாண்ட விழா
**

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

பெங்களூரை சேர்ந்த தி நியூ இன்டியன் டைம்ஸ் என்ற அமைப்பு, கடந்த 8 ஆண்டுகளாக மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருது கொடுத்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பெங்களூர் பேலஸ் மைதானத்தில் வரும் அக்டோபர் 23ம் தேதி பிரமாண்டமாக நடக்க உள்ளது. இது குறித்து சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் இந்த நிறுவனத்தின் சிஇஓ ரகுபட், நடிகர் தலைவாசல் விஜய், ஏ.யூ ஓடிடி.திரு சந்தோஷ்



ஆகியோர் விரிவாக பேசினர். திரு ரகுபட் பேசுகையில் ‘மீடியா துறையில் சிறப்பாக செயல்படும் தொகுப்பாளர், நிருபர், ஒளிப்பதிவாளர், எடிட்டர்.வாய்ஸ்ஓவர் ஆர்ட்டிஸ்ட், விற்பனை பிரதிநிதிகள் உட்பட பல துறையினருக்கு கடந்த 8 ஆண்டுகளாக விருது கொடுத்து கவுரவித்து வருகிறோம். தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பலர் பெங்களூர் வந்து விருது பெற்று இருக்கிறார்கள். இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளை சேர்ந்த மீடியாத்துறையினருக்கு 10க்கும் அதிகமான பிரிவுகளில் விருதுகள் கொடுக்க உள்ளோம். கூடுதலாக பிரிண்டிங் மீடியாவில் சிறப்பாக செயல்பவர்களுக்கும் பல்வேறு துறையி்ல் இந்த ஆண்டு முதல் விருதுகள் அளிக்க உள்ளோம். பெங்களூரில் நடக்கும் இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். பிரபலங்களை பாராட்டி, பிரபலங்கள் சாதனைகளை வெளியில் சொல்லும் மீடியாதுறையிரை பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. அடுத்த ஆண்டு மற்ற மாநிலத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம். தமிழில் விருது கமிட்டி நடுவராக மூத்த பத்திரிகையாளர் மீனாட்சிசுந்தரம் செயல்படுகிறார்.’’ என்றார்

நடிகர் தலைவாசல் விஜய் பேசுகையில் ‘‘மீடியாவுக்கு விருது கொடுப்பது, அவர்களின் செயல்கள், சாதனைகளை வெளியில் சொல்வது நல்ல விஷயம். அவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறேன். நான் பல விருதுகள் பெற்றுள்ளேன். யுகபுருஷன் என்ற மலையாள படத்தில் நாராயணகுருவாக நடித்தேன். அந்த படத்துக்கு கேரள அரசு விருது கிடைத்தது. அந்த கெட்அப்பை பார்த்து நடிகர் மம்முட்டி, அப்போதைய முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோர் பாராட்டினார்கள். இப்படிப்பட்ட பாராட்டுகள் எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. இப்போது சினிமா தவிர, ஓடிடியிலும் நடிக்கிறேன். ரிசார்ட் நெடுமாறன் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு. அதுவும் சந்தோஷம். சோஷியல் நல்ல விஷயங்களும் வருகிறது. தவறான விஷயங்களும் வருகிறது. என் தந்தை மறைந்த சோகத்தில், அவர் அஸ்தியை கரைக்க நின்று கொண்டு இருந்தேன். இயக்குனர் பாக்யராஜ் மறைந்துவிட்டார், எங்களிடம் போனில் 5 நிமிடம் பே சுங்க என்றார்கள். என் நிலையை எப்படி புரிய வைப்பது, சில விஷயங்களை கடந்து போக வேண்டும்
’ என்றார்

இந்த விழா, மீடியா துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முக்கியமான நிகழ்வாக அமைய உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த மீடியா துறையினருக்கு விருதுகள் வழங்கப்படுவதுடன், இந்த ஆண்டு முதல் பிரிண்டிங் மீடியா துறையினருக்கும் விருதுகள் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்த பிரமாண்ட விழா, மீடியா துறையினரின் சாதனைகளை கௌரவிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக எதிர்பார்க்கப்படுகிறது.
**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post Kauvery Hospital Alwarpet Introduces Endoscopic Spinal Fusion in Chennai
Close
%d bloggers like this: