ஜீ 5 யின் ‘மனோதரங்கல்’ மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடு!!

‘இலக்கிய மேதை’ எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ஜீ 5 யின் ‘மனோதரங்கல்’ மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடு

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும் வகையில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில் தயாரான ‘மனோதரங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி தொடரை ஜீ 5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம் டி வாசுதேவன் நாயரின் பிறந்தநாளில் ஜீ 5 – ஒன்பது புதிரான கதைகளை கொண்ட ‘மனோரதங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இதில் மலையாள திரையுலகின் ஒன்பது சூப்பர் ஸ்டார்கள் மற்றும் எட்டு புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களுடன் முன் எப்போதும் இல்லாத ஒத்துழைப்புடன் உருவாகி இருக்கிறது. இந்த ஆந்தாலஜி தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. மேலும் இந்தத் தொடர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

இந்தியாவின் குடும்பங்கள் சகிதமாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பொழுது போக்கு டிஜிட்டல் தளம் மற்றும் பன்மொழி கதை சொல்லியான ஜீ 5 – மலையாள திரையுலகின் புதிய சகாப்தத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘மனோரதங்கல்’ எனும் பாரம்பரிய தொடரை தொடங்குவதாக அறிவித்தது. ‘எம் டி யின் பிரம்மாண்டமான படைப்பு ‘ எனும் முத்திரையுடன் தயாராகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று திரையிடப்படும்.

மடத் தெக்கேபாட்டு வாசுதேவன் நாயர் என்ற அசலான பெயரைக் கொண்டிருந்தாலும், எம் டி வாசுதேவன் நாயர் என புகழ்பெற்ற இலக்கிய மேதையின் 90 ஆண்டு கால பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் இந்த படைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘மனோதரங்கல்’ என்பது கடவுளின் சொந்த தேசமான கேரளாவின் பசுமையான பின்னணியில் மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராயும் ஒரு சினிமா பயணமாகும். இதில் இடம்பெறும் அனைத்து கதைகளும் எம் டி வாசுதேவன் நாயரால் எழுதப்பட்டது. இந்தத் தொடர் மலையாள சினிமாவில் நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் திறமைகளை உச்சநிலையில் ஒன்றிணைக்கிறது.‌ ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது கதைகள் மூலம் இந்த தொடர் மனித நடத்தையின் முரண்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.‌ இரக்கம் மற்றும் மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய அடிப்படை உணர்வு தூண்டுதல்கள் ஆகிய இரண்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது. உன்னதம் – முதன்மை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்வதன் மூலம் உலகளாவிய அனுபவங்கள், உணர்வுகளை துல்லியமாக பேசும் மனித நேயத்தின் செழுமையான மற்றும் நுட்பமான சித்தரிப்பை இந்த தொடர் வழங்குகிறது.

முதன் முறையாக நட்சத்திர நடிகர்களும், திறமையான இயக்குநர்களும் ஜீ 5 யில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பத்ம விபூஷன் டாக்டர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய ஒன்பது அழுத்தமான கதைகளை இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது.

இதில் ‘ஒல்லவும் தீரவும்’ ( சிற்றலைகள் மற்றும் நதிக்கரை) – பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். இதுவே இந்த தொடரின் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

கடுக்கண்ணவ : ஒரு யாத்திரை குறிப்பு ( கடுக்கண்ணவ: ஒரு பயணக் குறிப்பு) – இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.

ஷிலாலிகிதம் (கல்வெட்டுகள்) – இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜுமேனன் -சாந்தி கிருஷ்ணா – ஜாய் மேத்யூ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

காட்சி ( பார்வை) -இயக்குநர் ஷியாம பிரசாத் இயக்கத்தில் பார்வதி திருவோத்து – ஹரிஷ் உத்தமன் நடித்திருக்கிறார்கள்.

வில்பனா ( தி சேல்) – இயக்குநர் அஸ்வதி நாயர் இயக்கத்தில் மது- ஆசிப் அலி நடித்திருக்கிறார்கள்.

ஷெர்லாக்- இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் ஜரீனா மொய்து நடித்திருக்கிறார்கள்.

ஸ்வர்க்கம் துறக்குன்ற நேரம் ( சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் தருணம்) – இயக்குநர் ஜெயராஜன் நாயர் இயக்கத்தில் கைலாஷ்- இந்திரன்ஸ்- நெடுமுடி வேணு- என் ஜி பணிக்கர் – சுரபி- லட்சுமி நடித்துள்ளனர்.

அபயம் தீடி வேண்டும் ( மீண்டும் ஒருமுறை புகலிடம் தேடி) – இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சித்திக் – இஷித் யாமினி- நசீர் நடித்துள்ளனர்.

காதல்க்காட்டு ( கடல் காற்று) – ரதீஷ் அம்பாட் இயக்கத்தில் இந்திரஜித் – அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்கள்.‌

இது தொடர்பாக ஜீ 5 இந்தியாவிற்கான தலைமை வணிக பிரிவு அதிகாரி மனீஷ் கல்ரா பேசுகையில், ” மனோரதங்கல் மூலம் இந்திய சினிமாவில் ஒரு திருப்புமுனையான தருணத்தை நாங்கள் காண்கிறோம். மலையாள சினிமாவின் ஆகச் சிறந்த திறமைசாலிகளை ஒன்றிணைத்திருப்பது… எம் டி வாசுதேவன் நாயரின் மரியாதை மற்றும் போற்றுதலுக்குரிய கொண்டாட்டமாகும். ஒரு இலக்கிய ஜாம்பவான்- சினிமாவில் தொலைநோக்கு பார்வையாளராக பயணித்த அவரது 90 ஆண்டு கால பாரம்பரியம் ஈடு இணையற்றது. மேலும் அவரது கதையை ஜீ 5 தளத்தில் இடம்பெறச் செய்திருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த தொகுப்பானது எம் டி வாசுதேவன் நாயரின் புத்திசாலித்தனத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களை பெற்ற… மலையாள சினிமாவின் விதிவிலக்கான படைப்பாற்றலை காட்சிப்படுத்துகிறது. இந்த கதைகளின் ஊடாக வளர்ந்து வரும் ரசிகர்களின் ஆர்வத்தையும், உலகளாவிய கவனயீர்ப்பையும் உணர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘மனோரதங்கல்’ படைப்பை டப்பிங் செய்து பரந்துபட்ட பார்வையாளர்களை சென்றடையச் செய்கிறோம். ” என்றார்.

பத்ம விபூஷன் டாக்டர் கமல்ஹாசன் பேசுகையில்,” எம் டி வாசுதேவன் நாயரின் வாழ்நாள் அபிமானி என்ற முறையில் ‘மனோரதங்கல்’ வழங்குவதில் பெருமை அடைகிறேன். இந்த தொகுப்பானது சாதாரண கதைகளின் தொகுப்பாக இல்லை. இந்த தொடர் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் என நான் நம்புகிறேன். ஏனெனில் இது உலகளாவிய அனுபவங்களையும், உணர்வு குவியலையும் குறிக்கிறது” என்றார்.

நடிகர் மோகன்லால் பேசுகையில், ” மனோரதங்கல் எம் டி யின் கொண்டாட்டம் – வாசுதேவன் நாயரின் நம்ப முடியாத மரபு ..கதை சொல்லிகள் மற்றும் கலைஞர்களின் தலைமுறைகளை வடிவமைத்து ஊக்கப்படுத்திய ஒரு மரபு. பிரியதர்ஷின் இயக்கத்தில் ‘ஒல்லவும் தீரவும்’ படைப்பில் பணியாற்றியது உண்மையிலேயே மறக்க இயலாத அனுபவம். மனித உணர்வுகள் மற்றும் உறவுகளின் சாரத்தை.. கேரளாவின் அழகான மற்றும் கலாச்சார ரீதியாக வளமான பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கதை. இந்தத் தொகுப்பு எங்கள் துறையில் தலை சிறந்த ஆளுமைகளை ஒன்றிணைக்கிறது. மேலும் இந்த அழுத்தமான மற்றும் ஆழமாக பயணிக்கும் கதைகளை பார்வையாளர்கள் காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எம் டி வாசுதேவன் நாயர் எனும் மேதைக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் தயாரான இந்த படைப்பில் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உள்ளது.” என்றார்.

நடிகர் மம்முட்டி பேசுகையில், ” மனோரதங்கல் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல் மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த பாக்கியமும் கூட. இந்தத் தொகுப்பு எம்டி வாசுதேவ நாயர் எனும் மேதைக்கான காணிக்கை. திறமையான இயக்குநரான ரஞ்சித் இயக்கத்தில் ‘கடுக்கண்ணவ: ஒரு யாத்திரை குறிப்பு’ படத்தில் வாசுதேவ நாயரின் பணி எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்தது. அதன் ஆழமான கதை மற்றும் உணர்வால் இதயங்களை தொடும் இந்தத் தொகுப்பின் ஒவ்வொரு பகுதியும் மலையாள திரையுலகின் புகழ்பெற்ற கதை சொல்லல் மற்றும் இயக்குநரின் திறமையை எடுத்துரைக்கிறது. மனோரதங்கல் ஒரு தலைசிறந்த ஒப்பற்ற படைப்பு. மேலும் எம் டி யின் இந்த குறிப்பிடத்தக்க கொண்டாட்டத்திற்கும், அய்யாவின் மரபிற்கும்.. பங்களிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், ” மனோரதங்கல் படத்திற்காக ‘ஒல்லவும் தீரவும்’ படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும். எம் டி வாசுதேவன் நாயரின் ஸ்கிரிப்டுகள் தலைசிறந்த படைப்புகள். ஒவ்வொன்றும் மனித இயல்பின் நுட்பமான உணர்வுகளை ஆராயும் கலை படைப்பு. அவரது பார்வையை திரையில் கொண்டு வருவது என்பது சவால் மிக்க பொறுப்பு மற்றும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்தத் தொகுப்பானது திரைத்துறையில் உள்ள பெரிய ஆளுமைகளின் கூட்டு முயற்சியாகும். ஒவ்வொருவரும் தங்களின் தனித்துவமான குரலை உருவாக்கி ஆழமான மனித மற்றும் உலகளாவிய தொடர்புள்ள கதைகளுக்கு தங்களின் பங்களிப்பை வழங்கி இருக்கின்றனர் எம்டியின் நீடித்த புத்திசாலித்தனத்திற்கு சான்றாக நிற்கும் மனோரதங்கல் படைப்பின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார் .

எம் டி வாசுதேவன் நாயர் எனும் இலக்கிய மேதையை உலகம் முழுவதும் திரைக்கு கொண்டு வரும் ஜீ 5 ஒரிஜினல் படைப்பான ‘மனோரதங்கல்’ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று திரையிடப்படுகிறது.

ஜீ 5 பற்றி…

ஜீ 5 இந்தியாவின் முன்னணி மற்றும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒப்பற்ற கன்டென்ட் தளமாகும். ஏனெனில் ஜீ எண்டர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ் லிமிடெட் எனும் குழுமத்திலிருந்து அதன் தொழில்நுட்ப திறனுடன் இயங்குகிறது. இதன் பிரிமியம் பிரத்யேக உள்ளடக்கத்தின் காரணமாக பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 3400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை உள்ளடக்கிய விரிவான மற்றும் மாறுபட்ட லைப்ரரி- 200க்கும் மேற்பட்ட டிவி நிகழ்ச்சிகள்- 230 க்கும் மேற்பட்ட அசல் மற்றும் 5 லட்சம் மணி நேரத்திற்கும் மேற்பட்ட தேவையான நிகழ்ச்சிகள் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி, பஞ்சாபி என 12 மொழிகளில் கண்டென்ட்களை வழங்குகிறது. சிறந்த ஒரிஜினல் படங்கள் – இந்திய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான திரைப்படங்கள் – தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் – இசை நிகழ்ச்சிகள் – குழந்தைகள் நிகழ்ச்சிகள் என ஏராளமானவை இடம்பெற்றுள்ளன. Edtech Cine Plays, News , Live TV, & Health & Lifestyle என ஏராளமான நிகழ்ச்சிகள் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப வழங்குநர்களுடன் மற்றும் அவர்களுடைய கூட்டணியில் இருந்தும் உருவாகும் ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப வசதியை கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இயக்குவதில் தடையற்ற மற்றும் தனி பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை பார்க்கும் அனுபவத்தை வழங்க ஜீ 5 செயல்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

chennai express news Previous post சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு!!
chennai express news Next post Successful Installation Ceremony of Rtn. Radhika Dhruv, the youngest & First Woman President of Rotary Club of Madras Cosmos!!
Close
%d bloggers like this: