திரை பிரபலங்கள் கலந்துக்கொண்ட தன்வீர் தயானந்த ஜெயந்தி விழா!

திரை பிரபலங்கள் கலந்துக்கொண்ட தன்வீர் தயானந்த ஜெயந்தி விழா! தன்வீர் தயானந்த ஜெயந்தி விழாவில் வெளியிடப்பட்ட ’திருவாசகம்’ ஆடியோ மற்றும் ‘அருள்மிகு அற்புதங்களும் ரகசியங்களும்’ புத்தகம்!’திருவாசகம்’ ஆடியோ மற்றும் ‘அருள்மிகு அற்புதங்களும் ரகசியங்களும்’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்தன்வீர் தயானந்த கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை (Dhanveer Dayananda Educational and Charitable Trust) 2024 ஆம் ஆண்டுக்கான ’தன்வீர் தயானந்த ஜெயந்தி’ விழாவை ஜூலை 2 ஆம் தேதி சென்னையில் கொண்டாடியது.தன்வீர் தயானந்த ஜெயந்தி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவரானா புனிதர் தன்வீர் தயானந்த யோகி ஜியின் பிறந்தநாளான ’தன்வீர் தயானந்த ஜெயந்தி’ விழாவில் ஆடியோ வடிவிலான ’திருவாசகம்’ மற்றும் ‘அருள்மிகு அற்புதங்களும் ரகசியங்களும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் விமல், வையாபுரி, நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா, ஆன்மீக சொற்பொழிவாளர் சோசோ மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வாகனங்கள் மூலம் அன்னதானமும் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தன்வீர் தயானந்த கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு தொண்டு பணிகளை செய்து வருகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, பல்வேறு கோவில்களின் பராமரிப்பு மற்றும் கோவில் விழாக்களுக்கான உதவி, கலாச்சார போதனைகள், யோகா மற்றும் தியான நுற்பங்கள் கற்பித்தல், சித்த மருந்துகள், வர்ம சிகிச்சை, ஜாதகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை சமுதாயத்திற்கு கற்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சென்னைஸ் அமிர்தா குழுமம் நிறுவனம் தனது 8வது பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடியது
Next post வெற்றிகரமாக 50 படங்களுக்கு மேல் PRO துறையில் !
Close
%d bloggers like this: