திரைவிமர்சனம் : கண்ணப்பா!

திரைவிமர்சனம் : கண்ணப்பா!

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

இதிகாசங்களில் கேட்ட கதையை இப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு கமர்சியல் கலந்து ரசிக்கும்படியான படமாக முகேஷ்குமார் சிங் எழுதி இயக்கிய திரைப்படம் கண்ணப்பா! உடுமூர் காட்டுப்பகுதியில் இருக்கும் வாயு லிங்கத்தை அபகரிக்க அர்பித் ரங்கா திட்டமிடுகிறார். ப்ரீத்தி முகுந்தன் காதலோடு வாயு லிங்கத்தை பாதுகாக்க வேண்டிய சூழலில் இருக்கிறார் விஷ்ணு மஞ்சு. வாயு லிங்கத்தை அபகரிக்க நடக்கும் போரில் அதை காப்பாற்ற சண்டையிடும் சரத்குமார் கொல்லப்படுகிறார். தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க விஷ்ணு மஞ்சு போரில் குதிக்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆனது? போரில் விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றாரா? கடவுளை வெறுக்கும் அவர் சிவ பக்தர் ஆனாரா என்பதே கதை. சிவபெருமானாக அக்சய் குமாரும், பார்வதி தேவியாக காஜல் அகர்வாலும் வரும் காட்சிகள் பரவசம்.


ஊர்த்தலைவராக வரும் சரத்குமார் மற்றும் மதுபாலா, முகேஷ் ரிசி, தேவராஜ், சம்பத் ராம், ஐஸ்வர்யா ஆகியோர் மிக சரியான நடிப்பை அளித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ் அசத்தி இருக்கிறார்கள். ஸ்டீபன் தேவாசி இசை, செல்டன் ஷா ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பலம். நல்ல திரைப்படமாக எடுத்து சிவனின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்தனர் கண்ணப்பா படக்குழுவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மீண்டும் இயக்குநராக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா . “கில்லர்” படத்தை இயக்கி நடிக்கிறார்!
Next post Love Marriage Movie Review
Close
%d bloggers like this: