
இதுவரை நாவல்களிலோ திரைப்படங்களிலும் சொல்லப்படாத கதை கருவும் கீனோ என்ற கதாபாத்திரமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாகவும் புதுமையானதாகவும் இருக்கும்…
இந்தத் திரைப்படத்தை எழுதி இசையமைத்து இயக்கி இருக்கும் ஆர்.கே.திவாகர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்குதல் துறையில் பயின்று சிறந்த முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று ஏ.வி.எம் மெமோரியல் விருது மற்றும் தங்கப் பதக்கமும் பெற்றவர்.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகாதாரா பகவத்தும் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படப் பதனிடுதல் (Film Processing &DI ) பிரிவில் முதல் மாணவராக தமிழ்நாடு திரைப்பட விருது பிரிவில் சிறந்த மாணவர் விருதை டாக்டர் கலைஞர் அவர்களிடம் பெற்றவர்.
இத்திரைப்படத்தில் மகாதாரா பகவத் மாஸ்டர் கந்தர்வா ( அறிமுகம்), ரேணுகா சதீஷ் ( அறிமுகம்), கண்ணதாசன் ராஜேஷ்கோபிஷெட்டி, இவர்களோடு பல புதுமுக கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள் .
இத் திரைப்படத்தின்
ஒளிப்பதிவு -ஆலிவர் டென்னி
படத்தொகுப்பு -கிருத்திகா காந்தி
எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர்- சிவம்
மக்கள் தொடர்பு -பெருதுளசி பழனிவேல்
இணை தயாரிப்பு- மகாதரா பகவத், ஆர்.கே திவாகர்
தயாரிப்பு – கிருத்திகா காந்தி
எழுத்து இசை & இயக்கம் ஆர். கே. திவாகர்
