
அர்ஜுன் கயல் காதல் ஜோடி ரசிகர்களை வசியப்படுத்தியதா ? விடாமுயற்சி விமர்சனம் !!
20 வருட தமிழ் சினிமாவில் கல்யாணம் முடியாத காதல் ஜோடி என்றால் அது அஜித் திரிஷா ஜோடி தான். உருகி உருகி காதலித்தாலும் அவங்க கதையில் பிரியும் படியான முடிவுரையே எழுதியிருப்பாரு இயக்குனர். அந்த வரிசையில் லைகா சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் திரில்லர் முயற்சியாக வெளிவந்திருப்பது அஜித் திரிஷா நடிப்பில் விடாமுயற்சி.
அஜர்பைஜான் நாட்டுத் தலைநகர் பாக்குவில் தன் மனைவி கயலுடன் (த்ரிஷா) வாழ்ந்து வருகிறார் அர்ஜுன் (AK). இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில், மனஸ்தாபங்கள் காரணமாக விவகாரத்து பெற விரும்புகிறார் கயல். அதற்கான காரணத்தையும், அதற்குப் பின்னாலுள்ள நியாயத்தையும் புரிந்துகொள்கிறார் அர்ஜுன். விவாகரத்து பெரும் வரையில் அம்மா வீடு செல்ல நினைக்கும் கயல் வாகன பழுதால் கன்டெயினர் லாரியில் வரும் ரக்ஷித் (அர்ஜுன்), மற்றும் அவரது மனைவி தீபிகாவுடன் (ரெஜினா கஸண்ட்ரா) செல்ல பின் காணாமல் போகிறார். காதல் மனைவியை AK மீட்டாரா என்பது மீதிக்கதை.
காதலர் தின மாதத்தில் வெளியாவதாலோ என்னவோ ஆக்ஷனுக்கு வேலை இல்லாமல் போகிறது. அஜித்குமார் காதலை கொண்டாடும் விதம் லயிக்க வைக்கிறது. அனிருத் இசை மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவோடு விடாமுயற்சி தாமதமாக வந்தாலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.