
புதிதாக வெளியிடப்பட்ட நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, கேரள திரைப்படத் துறையில் பெண் தொழில் வல்லுநர்களை துன்புறுத்துதல், சுரண்டல் மற்றும் தவறாக நடத்துதல் போன்ற அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை வெளிப்படுத்தி இருப்பது , நாடு தழுவிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது..
அதனை தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகின் பிரச்சனைகள் குறித்து உச்ச நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் பேசியுள்ளார். ஒரு பத்திரிகையாளர் உரையாடலில், அவர் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார், குற்றவாளிகள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைக்கு வாதிட்டார். “குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை அவசியம். அதேபோல், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
