
சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா ப்ரோமோ வில் நிலையான வேலைக்கு போகாமல் சாக்கு போக்கு சொல்லும் இளைஞர்கள் மற்றும் சொந்தக் காலில் எப்போ நிக்க போறான்னு கேட்கும் பெற்றோர்கள் என்ன விவாதம் காட்டப்பட்டது.
இதில் இளைஞர்கள் பலரும் அடுத்தவரிடம் சம்பளம் வாங்கும் வேலை எனக்கு பிடிப்பதில்லை எனவும், சொந்த தொழில் செய்ய பெற்றோர் காசு கொடுப்பது இல்லை எனவும் வீடியோ எடுக்கும் வேலை பிடித்திருப்பதாகவும் சொல்லும் பிள்ளைகள் ஒரு புறமும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் கிரிக்கெட் மொபைல் விளையாட்டு என பிள்ளைகள் பொழுதை கழிப்பதாக வேதனைப்படும் பெற்றோர்கள் ஒரு புறமும் இருக்கிறார்கள்.
இன்றைய 20 – 30 வயது இளையவர்கள் பொழுதுபோக்கில் தான் கவனம் செலுத்துகிறார்கள். YouTube Vlogs, Race Bikes, Mobile Phones, Insta Reels போன்றவை மூலம் எளிதில் பணம் சம்பாதிப்பது எப்படியென்று ஆர்வமா இருப்பது போல் தோன்றுகிறது.
யூடியூப் மோகம் அனைவரையும் வீழ்த்தி விட்டது. வேலைக்கு போகாமலே சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது. இது நிரந்தரம் இல்லை என்பது மனிதனுக்கு புரியும் பொழுது அவன் வாழ்க்கையே மீதியாகி போய் இருக்கும். இக்கால பசங்களுக்கு எதுவுமே புரியவில்லை நாம் வளர்ந்தது போல் இவர்கள் வளரவில்லை தந்தையின் கஷ்டமும் தெரியவில்லை தாயின் வருத்தமும் புரிவதில்லை. நான் பட்ட கஷ்டம்; என் புள்ள படக்கூடாது! என்று நினைத்த தாய் தகப்பனின் பிள்ளைகள் தான் இன்று இப்படி வளர்ந்து நிற்கிறார்கள்.