
கதைக்களம் :
70களில் வடக்குப்பட்டி என்ற ஊரில் காட்டேரி சுற்றி வருவதாக இருக்க, ஒரு நாள் அந்த காட்டேரி சந்தானத்துக்கு சொந்தமான நிலத்தில் அடிபட்டு விழுகிறது.அங்கு ஒரு திருடன் திருடி வந்த பானையை சாமி என்று மக்கள் கும்பிட, கடவுள் நம்பிக்கையே இல்லாத சந்தானம் தன் நிலத்தில் பானை இருப்பதால், அங்கையே கோவில் கட்டி பணம் சம்பாதிக்கிறார்.
அவரை தொடர்ந்து அந்த ஊருக்கு வட்டாட்சியர் வருகிறார் சந்தானம் உதவியுடன் கோவிலில் பணம் சம்பாதிக்கலாம் என நினைக்க, அதற்கு சந்தானம் மறுக்க, பிறகு அவர் சில சூழ்ச்சி செய்து கோவிலை மூடுகிறார், பிறகு ஊர் ஒன்று சேர்ந்ததா, கோவில் திறக்கப்பட்டதா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல் எப்போதும் படம் முழுவதும் கவுண்டர் வசனங்களால் நிரப்பும் சந்தானம் இதில் அடக்கி வாசித்துள்ளார், அவருடன் வரும் மாறன், சேஷு தான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாவே கலக்குகின்றனர்.
அதிலும் ஊர் மக்களுக்கு மெட்ராஸை நோயை பரப்ப, சென்னை வரை சென்று சேஷு மாறன் செய்யும் சேட்டைகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. ஆனால், அந்த சிரிப்பு படம் முழுவதும் உள்ளதா என்றால் கேள்விக்குறி தான். மேகா ஆகாஷ் ஏதோ 10 நாளைக்கு ஒரு நாள் கால்ஷிட் கொடுத்தது போல் எப்போதாவது படத்திலும் வருகிறார்
படத்தில் இரண்டு பெரிய தலைக்கட்டுகளாக காட்டப்படும் ஜான் விஜய், ரவி மரியா அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது அவர்கள் முட்டாள் தனங்களை காமெடியாக எடுத்துள்ளனர், அதற்காக வடிக்கட்டிய முட்டாள் போல் காட்டியது, சரி காமெடி படம் லாஜிக் பார்க்க கூடாது தான்.ஊருக்குள் சண்டை வரகூடாது, வந்தால் கோவில் திறக்காது, அதை அடக்க ஒரு கூட்டணி என்று சுவாரஸ்ய கதையில் அங்கும் இங்கும் காமெடி காட்சிகளை வைத்து முடிந்தளவிற்கு ஒரு பொழுதுப்போக்கு படத்தை கொடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அது வெறும் முயற்சியாகவே போனது தான் வருத்தம்
star Rating…
