
சிக்லெட்ஸ் விமர்சனம் :
Casting : Sathvik Verma, Nayan Karishma, Surekha Vani, Sriman, Jack Robinson, Amrita Halder, Manjeera, RajagopalDirected By : MuthuMusic By : Balamurali BaluProduced By : Srinivasan Guru.A நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே தோழிகளாக இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் மீது ஒவ்வொரு கனவு. அதே சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூன்று பெண்கள், தங்களது வயது கோளாறில் காதல், டேட்டிங் போன்ற விசயங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அதன்படி, மூன்று பேரும் தங்களது மனதுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து அவர்களுடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருப்பதற்காக பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு செல்கிறார்கள். பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர, தங்களது பிள்ளைகளை தேடிச் செல்கிறார்கள். இறுதியில், பிள்ளைகளின் ஆசை நிறைவேறியதா? அல்லது பெற்றோர்களின் கனவு பலித்ததா? என்பதை இரு தரப்பினருக்குமான அறிவுரையாக சொல்வதே ‘சிக்லெட்ஸ்’.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வயது கோளாறில் தாறுமாறாக வாழ நினைக்கும் மூன்று பேர் பேசும் வசனங்களில் நிறைந்திருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள், உடல் மொழியில் கவர்ச்சி என படம் முழுவதும் காம நெடியை தூவியிருக்கிறார்கள
Rating…
