ஆட்டிசம் குறைபாடு உள்ள 14 குழந்தைகள் கடலூரில் இருந்து சென்னை வரை சுமார் 165 கிலோ மீட்டர் கடலில் நீந்தி ஆசிய புத்தகத்தில் இடம் பிடித்து உலக சாதனை

ஆட்டிசம் குறைபாடு உள்ள 14 குழந்தைகள் கடலூரில் இருந்து சென்னை வரை சுமார் 165 கிலோ மீட்டர் கடலில் நீந்தி ஆசிய புத்தகத்தில் இடம் பிடித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

சென்னை :-

கடந்த பிப் 1 ந் தேதி முதல் நான்கு நாட்கள் ஆட்டிசம் குறைபாடு உள்ள 9 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள் கடலூரில் இருந்து சென்னை வரையிலான 165 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்கள் கடற்கரையில் நீந்தி ஆசியா புத்தகத்தில் இடம்பிடித்து உலக சாதனை படைத்துள்ளனர்

குறிப்பாக ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் கடலூரில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கடலில் நீந்தி பிப்ரவரி 4ஆம் தேதி இன்று மாலை சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தடைந்து ஆசியா புத்தகத்தில் இடம் பெற்று உலக சாதனை படைத்துள்ளனர்

உலக சாதனை நிறைவு விழா சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது, இதற்காக முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டுதுறை செயலாளர் மேகநாத் ரெட்டி ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு உலக சாதனை படைத்த குழந்தைகளை பாராட்டி மகிழ்ந்தனர்

இதனைத் தொடர்ந்து அந்த குழந்தைகளை சாதனையை பாராட்டி “ஏசியன் புக் ஆஃப் ரெகார்ட்” என்ற அமைப்பு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு

“ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முன்னிலைப்படுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. எல்லா குழந்தைகளைப் போல அவர்களும் சாதனையாளர்கள் தான். அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ம் ஒரு உதாரணம்” என்றார்.

(பைட் – சைலேந்திரபாபு – தமிழக முன்னாள் டிஜிபி)

“மற்ற குழந்தைகளைப் போல எங்கள் குழந்தைகளும் சாதனையாளர்கள் தான். அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். அவர்கள் இந்த கடலில் நீந்தி வரும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்ற குழந்தைகளுக்கு எங்களுடைய குழந்தைகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆட்டிசம் குழந்தைகளை கொண்டுள்ள பெற்றோர் மன உறுதியோடு அவர்களை சாதனை படைக்க ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே எங்களுடைய குழந்தைகளை தைரியமாக இந்த நிகழ்விற்கு அனுப்பி வைத்தோம். முறையாக பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டது. யாரும் எங்கள் குழந்தைகளை பரிதாபத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என பங்கேற்ற குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post Vadakkupatti Ramasamy Movie Review 🍿
Next post காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு
Close
%d bloggers like this: