
லக்கி மேன் – இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு, வீரா, ரேச்சல் ரெபக்கா என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் குடும்ப திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘திங்க் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
1995 இல் நடித்த கார்த்திக் நடித்த லக்கி மேன் திரைப்படத்திற்கும் இப்பொழுது யோகி பாபு நடித்த லக்கி மேன் திரைப்படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, எப்பயாவது நம்ம ஒரு பொருள் மீது ரொம்ப ஆசை வைத்திருப்போம் அந்த ஆசை வச்ச பொருள் நமக்கு கிடைக்கும்போது நம்ம வாழ்க்கையில ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்
அப்படிப்பட்ட ஒரு மாற்றம்தான் யோகிபாபு நடந்திருக்கு, படம் தான் லக்கிய தவிர்த்து எல்லாமே நெகட்டிவா தான் நடந்துட்டு இருக்கு, திடீர்னு ஒரு நாள் ஓங்கி அடிச்ச மாதிரி ஒரு பாசிட்டிவான விஷயம் அவருக்கு நடக்குது அதற்கு பின்னாடி சில பல பிரச்சனைகள் நடந்து அவரை சரிக்கி விழுந்த மாதிரி இருக்கு அதனை எப்படி அவர் பேஸ் பண்ணுகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
