ஜென்டில்மேன்-ll’ துவக்க விழாவில் தங்க நாணயம் பரிசளிப்பு

*‘ஜென்டில்மேன்-ll’ துவக்க விழாவில் தங்க நாணயம் பரிசளிப்பு!*

*‘ஜென்டில்மேன்-2’ இசையமைப்பாளர் யார் ? சரியாக பதிலளித்த மூவருக்கு எம்.எம்.கீரவாணி கையால் தங்க நாணயம் பரிசு*ஜெண்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் சார்பில் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-ll’. இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். கலை தோட்டா தரணி. ஒளிப்பதிவு அஜயன் வின்சென்ட். ‘ஜென்டில்மேன் 2’ படம் அறிவிக்கப்பட்டதும் அதில் பங்குபெறும் முதல் தொழில்நுட்ப கலைஞராக அறிவிக்கப்பட்டது இசையமைப்பாளர் பற்றித்தான். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ளார் என்றும் அவர் யார் என சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களில் மூன்று பேருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என்கிற போட்டியும் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து ஆயிரக்கணக்கானோர் இந்த போட்டியில் கலந்துகொண்டு தங்கள் யூகங்களை வெளிப்படுத்தினார்கள். அதில் நூற்றுக்கணக்கானோர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் பெயரை குறிப்பிட்டிருந்தார்கள். அப்படி சரியாக பதில் சொன்ன நபர்களில் முதல் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஈரோடு, பெங்களூர், ஹைதராபாத் என மூன்று மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் ஜாவித், மவுலி, சரத் ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்து தங்க நாணய பரிசை வென்றுள்ளார்கள். சொன்னதை செய்வோம்.. செய்வதைத்தான் சொல்வோம் என்கிற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இவர்கள் மூவருக்கும் தங்க நாணயம் பரிசளித்து கவுரவப்படுத்த உள்ளார்.வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி காலை 10.30 மணியளவில் இந்தப்படத்தின் துவக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் பிரம்மாண்டாமாக நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் கைகளால் இவர்கள் மூவருக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.— Johnson Pro

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ChandiniTamilarasan
Next post நெல்சனை மேடையிலையே தலைவரை பற்றி கேள்வி கேட்ட PRO ரியாஸ் நச் னு பதில் சொன்ன நெல்சன் | CHENNAI EXPRESS
Close
%d bloggers like this: