
விவசாயம் ஒவ்வொரு தலைமுறையாக எவ்வாறெல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை சொல்லும் கதை பூர்வீகம்.
இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் போஸ் வெங்கட், கதிர் , மியா ஸ்ரீ, இளவரசு, சூசன், பசங்க சிவக்குமார் ஆகியோர் நடித்திருக்கும் கிராமத்து மண்வாசனையான பூர்வீகம் திரைப்படம் மக்களிடையே தங்களை நிரூபிக்க பாடுபட்டுள்ளது.
கதிரின் தந்தையாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், நகர வாழ்க்கை மோகத்தால் மகனை படிக்க வைத்தாலும் அவர் தன்னிடமிருந்து விலகும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இடங்களில் கண் கலங்க வைத்து விடுகிறார். கதிர் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பில் வேறு பாட்டை காட்டி இருப்பதோடு தனது உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தி இருக்கிறார். மியா ஸ்ரீ குடும்ப பாங்கான முகத்தோடும் எளிமையான அழகோடும் கிராமத்து பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இசையமைப்பாளர் சாணக்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமத்து மண் மணத்தோடு இனிமையாக இருக்கிறது.