Madraskaran Movie Review !!

கொண்டாட்டமாகத் திருமண வீட்டிலிருந்து தொடங்கும் முதல்பாதிப் படம் விபத்து ஒன்றுக்கு பிறகு திருமணம் நடந்ததா? விபத்தான பெண் மற்றும் குழந்தை என்ன ஆனது என்பதே மீதி கதை. புது முகங்களான ஷேன் நிகம் மற்றும் நிஹாரிகா தெளிவாக நடிப்பை பதிவு செய்துள்ளனர்.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

தனது திருமணத்தைப் புதுக்கோட்டை அருகேயுள்ள சொந்த கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்கிறார், சென்னையில் வேலை செய்யும் சத்யா (ஷேன் நிகம்). அவருடைய காதலியும் மணப்பெண்ணுமான மீரா (நிஹாரிகா), திருமணத்துக்காக, முதல்நாளே புதுக்கோட்டை வந்து சேர்கிறார். விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவரைக் காண, செல்போன் பேசியபடி காரை ஓட்டிச் செல்கிறார் சத்யா. வழியில் நிறைமாதக் கர்ப்பிணியான கல்யாணி (ஐஸ்வர்யா தத்தா) மீது காரை மோதிவிடுகிறார். அந்த ஊர் மக்கள் சத்யாவைப் பிடித்துக் கொள்கிறார்கள். பிறகு அவரின் திருமணம் நடந்ததா? கல்யாணிக்கும் வயிற்றிலிருக்கும் அவரது குழந்தைக்கும் என்னவானது என்பதை நோக்கிக் கதை நகர்கிறது.

கதை இயக்கம் வாலி மோகன் தாஸ். தயாரிப்பு பி ஜெகதீஷ். இசை சாம் சி எஸ். நாயகனாக நடித்துள்ள ஷேன் நிகம், மலையாள வாசனை வீசும் தமிழ் பேசினாலும் நடிப்பில் அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

chennai express news Previous post Birthday Peek from ‘Toxic: A Fairytale for Grown-ups’ Actor Yash Update !!
chennai express news Next post Poorvigam Movie Review !!
Close
%d bloggers like this: