
EMIS எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் இருந்து பெற்றோர்களின் மொபைல் எண்களை பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு மே 25 கடைசி நாள் ஆகும். ஆசிரியர்கள் பெற்றோர்களின் மொபைல் எண்களை பதியும் பொது பெற்றோர்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு O T P வருகிறது. அந்த எண்ணை பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் பகிர்ந்தால் தான் பதிவு முழுமை அடையும். சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து விட்ட நிலையில் O T P பகிர்வை பெற்றோர்கள் மறுக்கின்றனர். எனவே ஆசிரியர்கள் செய்வதறியாது பெற்றோர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
