
*ஆனந்தம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு* +2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியை தொடர முடியாத, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களை முறைப்படி கண்டறிந்து அவர்களின் முழு கல்வி செலவையும் ஏற்று உயர்கல்வி வழங்குகிறது நமது

Anandham Youth foundation.இதுவரை ஆனந்தம் 820 மாணவர்களுக்கு MBBS, Engineering, Law, Agri , Paramedical உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில்உயர்கல்வி வழங்கியிருக்கிறது.படிப்பை முடித்த 450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளிலும்,TCS, CTS, IBM, HCL, ACCENTURE, L&T பல்வேறு முன்னணி பன்னாட்டு நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். அத்தனை குடும்பங்களிலும் இன்று வறுமை நீங்கி மகிழ்ச்சி நிலவுகிறது.ஆனந்தம் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து ‘ஆனந்தம் விழுதுகள்’ என்ற அமைப்பை உருவாக்கி சமூக பொறுப்புணர்வோடு செயல்படுகிறார்கள். ஆனந்தம் முன்னாள் மாணவர்களின் சந்திப்பும், அவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியும் நாளை மே 5 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.மாலை 5 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.இந்த நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டு வறுமை எனும் தடையை உடைத்து சாதித்துக் காட்டிய ஆனந்தம் முன்னாள் மாணவர்களை வாழ்த்திட அன்போடு அழைக்கிறோம். நன்றியுடன்…S.செல்வகுமார்Founder, Anandham Youth foundation 🙏🙏🙏
