அக்கரன் விமர்சனம்

கதைக்களம் :

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

எம்.எஸ்.பாஸ்கர், இருவரை கடத்திச் சென்று, அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். அதற்கு இருவரும் வெவ்வேறு விதமாக பதில் சொல்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் அவர்களின் பதில்களில் உண்மை இல்லாததால் அவர்களைக் கொடூரமாக தண்டிக்கத் தயாராகும் போது இருவரும் ஒரு கட்டத்தில் உண்மையைச் சொல்கிறார்கள். அதன் மூலம் பல அதிர்ச்சியான சம்பவங்கள் திரையில் விரிகின்றன. அது என்ன?,

எம்.எஸ்.பாஸ்கருக்கும் என்ன சம்பந்தம்?, அவர் கடத்தும் இரண்டு பேர் யார்? போன்ற கேள்விகளுக்கான விடைதான் படத்தின் மீதிக்கதை. குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த எம்.எஸ்.பாஸ்கர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தன் மகள்களை தவறாக நடத்தியதற்கு பழிவாங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தாலும், தன் உள்ளத்தில் உள்ள கோபத்தை அக்கினிப் பார்வையுடன் சரியான முறையில் வெளிப்படுத்தி தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். ஆரம்பத்திலேயே நடிகராக அறிமுகமாகும் எம்.எஸ்.பாஸ்கர், பிளாஷ்பேக் காட்சிகளில் வழக்கமான அப்பா வேடத்தில் படத்தை இயல்பாகக் கொண்டு செல்கிறார்.

படத்தின் திடீர் திருப்பத்தால் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகி இன்னொரு ஹீரோவாக மாறும் கபாலி விஸ்வந்த், தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு கவனத்தை ஈர்க்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கரின் மூத்த மகளாக நடிக்கும் வெண்பா, சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களைக் கூட ரசிக்கும்படி மிக இயல்பாகவும் அற்புதமாகவும் செய்திருக்கிறார். இளைய மகளாக பிரியாவின் நடிப்பு அபாரம்.

அரசியல்வாதியாக வளர்த்தெடுக்கப்பட்ட நமோ நாராயணன், தனது வழக்கமான பாணியில் அட்டகாசமான அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் எம்.ஏ.ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.ஆர்.ஹரி இருவரும் ஆக்‌ஷன் த்ரில்லர் வகையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பம் முதலே கதைக்குள் நம்மை அழைத்துச் செல்லும் இயக்குனர் அருண்.கே.பிரசாத், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் வழக்கமான பழிவாங்கும் கதையாக படத்தை நகர்த்தினாலும், ஃப்ளாஷ்பேக்குகளாலும், எதிர்பாராத திருப்பங்களாலும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிறார்.

எதிரிகளை எல்லாம் தாக்கும் வில்லனின் ஆக்‌ஷன் கொஞ்சம் லாஜிக் மீறலாக இருந்தாலும், ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சித்த இயக்குநர் அருண் கே.பிரசாத், விஷயங்களின் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். அரசியல், நீட் பயிற்சி மையங்களில் மோசடி என இறுதியில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Star Rating..

Rating: 3 out of 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மீண்டும் இணையும் “ஜோ” ஜோடி !!
Next post ஆனந்தம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Close
%d bloggers like this: