கதையில் லாஜிக் இல்ல.. ஆனால், பொம்மை முழு விமர்சனம்

ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த பொம்மை திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

தமிழ் சினிமாவில் ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி உட்பட பலரது நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் பொம்மை

படத்தின் கதைக்களம் :

மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கும் எஸ் ஜே சூர்யா பொம்மை செய்யும் கம்பெனியில் வேலை செய்ய அவருக்கு ஒரு பொம்மை மீது காதல் வருகிறது. அந்த பொம்மையை தனது சிறு வயது காதலியாக (பிரியா பவானி சங்கர்) நினைத்து வாழ தொடங்குகிறார்.

இதனால் அந்த கம்பெனி சூப்பர்வைசரிடம் அந்த பொம்மையை மட்டும் விற்க வேண்டாம் என சொல்லிய நிலையில் இவர் ஊருக்கு போய் திரும்பி வந்து பார்க்க அந்த பொம்மை விற்கப்பட்டது தெரிய வர சூப்பர்வைசரை கொலை செய்து அங்கிருந்து தப்பித்து பொம்மை தேட தொடங்குகிறார்.

இப்படியான நிலையில் எஸ் ஜே சூர்யா வாழ்க்கையில் அடுத்து நடந்தது என்ன என்பது தான் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

எஸ் ஜே சூர்யா மனநலம் பாதிக்கப்பட்டவராக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்.

பிரியா பவானி சங்கர், சாந்தினி ஆகியோர் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது

இயக்குனர் ராதா மோகன் லாஜிக் இல்லாத கதையை கையில் எடுத்து இருந்தாலும் நம்மையும் மீறி படத்தை ரசிக்க வைக்கிறார்.

மொத்தத்தில் பொம்மை ரசிக்க செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie
Next post ‘பஜனை ஆரம்பம் ‘ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Close
%d bloggers like this: