
BTG நிறுவன நிர்வாகத் தலைமை அதிகாரி மனோஜ் பினோ பேசியதாவது…
பிடிஜி நிறுவனத்தின் பாபிக்கு முதல் நன்றி. சினிமாவில் வந்தது 8 வருஷம் ஆகிவிட்டது, அதில் பீக் இந்த வருடம் தான். பிடிஜி நிறுவனம் மிகப்பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தருகிறது. பாபியும் நானும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். பாபியை எப்போதும் பிரமிப்பாகப் பார்க்கும் அளவு, பணிகள் செய்துகொண்டே இருப்பார். நான் ஒரு மருத்துவன் என்றாலும் எங்கள் குடும்பம் மொத்தமும், பாபியைப் பிரமிப்பாக பார்க்கிறோம். பாபி படம் எடுக்கப்போகிறேன் பார்த்துக் கொள் என்று சொன்ன போது எந்த மறுப்பும் என்னிடம் இல்லை. பாபியின் ஷெட்யூல் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். அவர் அத்தனை வேலைகளை முடித்துவிட்டு, என்னுடன் இரவில் படம் பற்றிப் பேசுவார். என் மனைவியே என்னைவிட பாபியிடம் தான் அதிகம் பேசுகிறீர்கள் என்பார். ஆனால் நாங்கள் பேசினால் தான் அடுத்த ஸ்டெப் என்ன செய்யலாம் எனத் தீர்மானிக்க முடியும். எங்கள் உழைப்பும், பேச்சும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். இப்போது சினிமாவின் வியாபாரம் மாறியிருக்கிறது. யார் நடிக்கிறார்கள், என்ன படம், என்ன கதைப் படம் எப்படி வரும் என்பதை எப்போது கேட்டாலும், எங்களால் காட்ட முடியும் அது மாதிரி தான் நாங்கள் இயங்கி வருகிறோம். ஒரே நேரத்தில் 3 படங்கள் இப்போது அடுத்த கதைகளையும் கேட்டு வருகிறோம். எங்களால் ஒரே நேரத்தில் பல படங்களைக் கையாள முடியும் என்பதை நிரூபிக்க நினைக்கிறோம். அடுத்தடுத்து திட்டமிட்டபடி பல படங்கள், எங்கள் நிறுவனம் மூலம் வரும். ஜெயம் ராஜா என் நீண்ட கால நண்பர், எனக்காக எங்களை வாழ்த்த வந்துள்ளார் நன்றி. அஜய் ஞானமுத்து எங்கள் நிறுவனத்தில் மிரட்டலான படத்தைச் செதுக்கி வருகிறார். டிமாண்டிக் காலனி 2 உங்களை மிரட்டும். அருண் விஜய் நான் சினிமாவுக்கு வரும் முன்பே நண்பர், அப்போதும் இப்போதும் அண்ணன் என அன்பாக இருப்பார். அவர் எங்கள் படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தக்கதை வந்தவுடன் அவரிடம் தான் முதன் முதலில் கதைச் சொல்லச் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்தது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். திருக்குமரன் மிகச்சிறந்த திறமைசாலி, அவரிடம் பெரிய பிளானிங் இருக்கும். அது அவரது பிளஸ். இந்தப்படம் கண்டிப்பாகத் திருக்குமரனுக்கு சூப்பர் ஹிட்டாக அமையும். அவர்ப் பெரிய வெற்றிப் பெற்றால் எங்களுக்கு மகிழச்சி. சித்தி இத்னானி பலரது மனதைக் கொள்ளை கொண்டவர். இந்தப்படம் முடியும் போது தமிழ்ப் புலவர் ஆகிவிடுவார். தான்யா இப்படத்தில் பங்குகொண்டது மகிழ்ச்சி. சாம் சி எஸ் பாடல்கள், பின்னணி இசை அற்புதமாக வந்துள்ளது. நடிகர்ப் பாலாஜிக்கு இது பெரிய திருப்புமுனையாக இருக்கும். எடிட்டர் ஆண்டனி எப்போது கேட்டாலும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்பார், எங்களை வாழ்த்த வந்த ஆண்டனிக்கு நன்றி. எல்லாப்படமும் பிரம்மாண்டமாக வரும் எனச்சொன்னால் உங்களுக்குப் போரடிக்கும், ஆனால் அது தான் உண்மை. இந்தப்படம் ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் உங்களுக்கு ஆச்சர்யம் தரும், டிவிஸ்ட் இருக்கும். உங்களைக் கண்டிப்பாக இப்படம் மகிழ்ச்சிப்படுத்தும். நன்றி.

நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…
பாபி சாரை இப்போது தான் நேரில் பார்க்கிறேன் அவர் அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது அப்டேட் தந்துகொண்டே இருப்பார். அவரை நேரில் பார்த்தது மகிழ்ச்சி. என்னை இந்தப்படத்தில் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநர்த் திருக்குமரனுக்கு நன்றி. மனோஜ் சாருக்கும் நன்றி. அருண் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…
இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண் விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
