“ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !! PART 1

RettaThala First Look Poster

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது..

இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்புதமான படங்கள் செய்துள்ளார். இவர்கள் மூவரையும் இணைத்து அற்புதமான கதைச் செய்துள்ளார் திருக்குமரன். அவர்ச் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைகள் தேர்ந்தெடுப்பதில், தயாரித்து வழங்குவதில் ரசிகர்களுக்கு நல்ல படைப்புகள் தர வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருக்கிறோம். அந்த வகையில் திருக்குமரன் மிகச்சிறந்த திரைக்கதைச் செய்துள்ளார். சாம் சி எஸ் இசைப் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மனோஜ் பினோ என் கஸின், அவர்த் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்கிறார். அவர் இதற்கு முன் திரைத்துறையில் பல பணிகளில் பணியாற்றியுள்ளார். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது, அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைத் தான் எங்கள் கம்பெனி செய்து வருகிறது. 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம், இப்படிப்பட்ட நிலையிலிருந்து கொண்டு, ஏன் திரைத்துறைக்குள் வருகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ஏனெனினில் சினிமா எனக்கு அவ்வளவு பிடிக்கும். அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது, சாம் சி எஸ் செய்வதை என்னால் செய்ய முடியாது, ஆனால் அவர்களை வைத்து அற்புதமான படைப்புகளை உருவாக்க முடியும். அந்த ஆசையில் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளோம். நான் ஒரு தமிழ் அமெரிக்கன், ஏன் அமெரிக்கர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என நான் வெகுவாக ஆராய்ச்சி செய்துள்ளேன். ஹாலிவுட் எப்படிப் பெஸ்ட் கொடுக்கிறார்கள் அதை எப்படி நாம் கோலிவுட்டில் கொடுக்கலாம் என முயற்சிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொன்றையும் கவனமாக ஆராய்ந்து, ஆட்டோமெடிக்காக இயங்குமாறு செய்துள்ளோம். நான் 2 படம் அல்லது 3 படம் எடுப்பதற்காக வரவில்லை. ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கவே வந்துள்ளேன். பல படங்களைத் தொடர்ந்து நாங்கள் எடுக்கவுள்ளோம். ஒரு துறையில் வளர்ந்தவனாக நான் இந்தச் சமூகத்திற்கு சிலவற்றைத் திரும்ப அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நாங்கள் சம்பாதிப்பதை, திரும்ப மக்களுக்குத் தர வேண்டும். கொடுப்பது வாங்குவதை விட மகிழ்ச்சிகரமானது. அதற்கான பல வழிகளில் ஒன்று தான் இந்தக்கம்பெனி. இன்று உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என் படக்குழுவினர், நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது – ‘உழைப்பாளர் தினம்’
Next post “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !! PART 2
Close
%d bloggers like this: