
Aval Peyar Rajni Movie Review : வினில் ஸ்கரியா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், ரெபோ மோனிகா ஜான், அஷ்வின் குமார், கருணாகரன், சைஜு குரூப், ஷான் ரோமி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தை காளிதாஸ் ஜெயராம் சொந்தமாக தயாரித்துள்ளார். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசைக்குழு 4 மியூசிக்ஸ் இசைமைத்துள்ளது
த்ரில்லர் கதையை கையில் எடுத்து ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ள நிலையில், அதை திரைக்கதையில் சரியாக செயல்படுத்தியிருக்கிறாரா என்பதை தற்போது பார்க்கலாம்.வெறிச்சோடிய சாலையில் சைஜு குரூப் கொடூரமாக படுகொலை செய்யப்படுகிறது. இந்த சம்பவத்தை அவரது மனைவி நமீதா பிரமோத் மற்றும் சிலர் சம்பவத்தை பார்க்கின்றனர். கொலையை ஒரு பெண் செய்ததாகச் சிலரும், பேய் என்று சிலர் சொல்லவும், காவல்துறையினர் குழம்பிப் போகின்றனர். இதற்கிடையில் சைஜு குரூப் – நமிதா பிரமோத்தின் உறவினர் காளிதாஸ் ஜெயராமை ஒரு பெண் பின்தொடர்வது போல தெரிகிறது. அந்த பெண்ணிற்கும் சைஜு குருப் கொலைக்கும் தொடர்பு இருப்பதை அவர் கண்டறிகிறார். காவல் துறையினரின் உதவியுடன் அதைக் கண்டுபிடிக்க முயலும் போது பல எதிர்பாராத பல நிகழ்வுகள் நடக்கின்றன. இறுதியாக கொலையாளி பெண்ணா? பேயா? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதையாகும்.
