ஜோ விமர்சனம் | Joe Review tamil

ஜோ கதைக்களம் :

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில், ரியோ ராஜ் ஹீரோவாக நடித்து இன்று வெளியாகி உள்ள திரைப்படம் ‘ஜோ’. வளர்ந்து வரும் இளம் நடிகரான ரியோ ராஜ், மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்ததா? இல்லையா என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவனாக வருகிறார் ரியோ ராஜ். இவர் தன்னுடைய கல்லூரியில் படிக்கும் நாயகி மாளவிகாவை துரத்தி துரத்தி காதலிக்க, ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க துவங்குகின்றனர். பின்னர் நான்காண்டு கல்லூரி படிப்பு முடிந்து இருவருமே அவரவர் சொந்த ஊருக்கு செல்லும் நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வருகிறது. நாயகி வீட்டில் உண்டாகும் எதிர்ப்பால் மாளவிகா தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்.

இதனால் ஏற்படும் மன உளைச்சலால், குடிகாரனாக மாறுகிறார் நாயகன் ரியோ ராஜ். மகனை எப்படியும் திருத்த வேண்டும் என்பதற்காக அவருடைய பெற்றோர் இன்னொரு நாயகியான பவ்யாவை திருமணம் செய்து வைக்கின்றனர். காதல் வாழ்க்கையை தொலைத்த சோகத்தில் ரியோ இருக்க,  பவ்யா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த கசப்பான சம்பவங்களால் வேதனையோடு வாழ்கிறார். இதுவே இவர்கள் இருவருக்கிடையையும் மோதல் உண்டாக காரணமாக அமைகிறது.

மொத்தத்துல
மீண்டும் இருவரும் இணைந்தார்களா அல்லது பிரிந்தார்களா என்பது தான் மீதி கதை

Rating: 3 out of 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளில் வெளியான ‘கண்ணப்பா’
Next post பருத்திவீரன்” தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில்
Close
%d bloggers like this: