
கெழப்பையா கதைச்சுருக்கம்:
ஒரு கார் அதில் நான்கு பேர், அதிலும் ஒரு கர்ப்பிணிப் பெண், அனைவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்படி அவர்கள் செல்லும் வழியில் ரோட்டை மறைத்துக் கொண்டு ஒரு கிழவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறான், அந்த கிழவன் காருக்கு வழி விடாமல் செல்லுவதால் காருக்குள் இருப்பவர்கள் ஹாரன் அடிக்கிறார்கள், அப்பவும் அசராதவன் மீண்டும் அதே வழியில் வழி விடாமல் சென்று கொண்டிருக்கிறான், மீண்டும் மீண்டும் ஹாரன் அடித்தும் அந்த கிழவன் அசர்வதாக தெரியவில்லை வழியும் விடுவதாக இல்லை, ஒரு கட்டத்திற்கு மேல் அந்த காருக்குள் இருப்பவர்கள் கடுப்பாகி அந்த கிழவனிடம் இறங்கி சண்டை போடுகின்றனர் அப்படி சண்டையிட்டும் கிழவன் வழிவிடாததற்கு என்ன காரணம்? இவர்களுக்குள் சண்டை முற்றியதா அல்லது கிழவன் மீண்டும் வழி விடாமல் சென்றாரா! அப்படி வழி விடாமல் செல்வதற்கு என்ன காரணம் என்பது தான் படத்தின் மீதி கதை.
