அடுத்த தலைமுறை கண் சிகிச்சை நிபுணர்களை உருவாக்க டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் 18வது கல்பவிருக்ஷா மருத்துவ கருத்தரங்கில்
• இருநாள் நிகழ்வாக நடைபெறும் தேசிய கண் மருத்துவ கருத்தரங்கில் கல்வியாளர்களாக 30+ முன்னணி மருத்துவ நிபுணர்களும் 300+ முதுகலை மருத்துவக் கல்வி மாணவர்களும் பங்கேற்கின்றனர்.
• முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான குறுகிய கால தீவிர கல்வித் திட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில் கண் மருத்துவவியலில் தேர்வு தொடர்பான தலைப்புகள் மீது நிபுணர்களின் உரைகள், முதல் நாளன்று நடைமுறை பயிற்சி அமர்வு மற்றும் இரண்டாவது நாளன்று ஒரு வினாடி வினா (க்விஸ்) திட்டமும் இடம்பெறுகின்றன.
சென்னை: 20 செப்டம்பர் 2025: டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் கண் ஆராய்ச்சி மைய அறக்கட்டளை, முதுகலை கண் மருத்துவ மாணவர்களுக்கான கல்பவிருக்ஷா 18வது மருத்துவ கருத்தரங்கினை இன்று தொடங்கி வைத்திருக்கிறது . மருத்துவ திறனையும், தேர்வுகளை எதிர்கொள்ள தயார் நிலையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த இருநாள் கருத்தரங்கில் இந்தியா முழுவதிலுமிருந்து 300க்கும் அதிகமான இளம் கண் மருத்துவர்களும், கல்வியாளர்களாக 30 முன்னணி நிபுணர்களும் பங்கேற்கின்றனர்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். அஸ்வின் அகர்வால் தலைமையில் ஒருங்கமைக்கப்பட்டுள்ள இந்த கருத்தரங்கை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான டாக்டர். எழிலன் நாகநாதன், தொடங்கி வைத்தார். இந்நிகழ்வினை நடத்தும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் அமைப்புக் குழு செயலாளர்களான டாக்டர். எஸ். சௌந்தரி, டாக்டர். திவ்யா அசோக் குமார் மற்றும் டாக்டர். ப்ரீத்தி நவீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதுகலை மருத்துவ மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குறுகியகால கல்வித்திட்டத்தில் பல்வேறு வகையான பலன்கள் மாணவர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. நோயறிதலுக்கான செயல்முறைகளைப் புரிந்துகொள்வது, தேர்வு தொடர்பான முக்கியமான தலைப்புகள் குறித்த சிறப்புரைகள், செய்முறைத் தேர்வுக்கான விளக்க உரைகள் மற்றும் நேரடிப் (Wetlab) பயிற்சி ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. கிளக்கோமா (கண் அழுத்த நோய்) கருவிழி, நரம்பியல் சார்ந்த கண் மருத்துவம், கருவிழி ஆகியவை முக்கியமான சிறப்பு பிரிவுகளில் நிபுணர்களான முன்னணி கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களால் இந்த அமர்வுகளும், நேரடி பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்துள்ள முதுகலை பட்டதாரிகள், தேர்வுக்கான நேர்வுகளை விளக்க உரையுடன் சமர்ப்பிப்பார்கள். இவற்றுள் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் சிறந்த மருத்துவ நேர்வுக்கு டாக்டர். (திருமதி). T. அகர்வால் விருது வழங்கப்படும்.
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான டாக்டர். எழிலன் நாகநாதன் இந்நிகழ்வில் உரையாற்றியபோது, “கண் மருத்துவத்தின் எதிர்காலத்தை உருவாக்க கல்வி ரீதியான நேர்த்தியும், மருத்துவ நிபுணத்துவமும் எப்படி ஒருங்கிணைந்து, செயல்பட முடியும் என்பதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக கல்பவிருக்ஷா திட்டம் திகழ்கிறது. இளம் கண் மருத்துவர்களை வளர்த்தெடுப்பதிலும், தமிழ்நாட்டிலும் மற்றும் அதைக் கடந்தும் கண் சிகிச்சைக்கான கல்வி மற்றும் தீர்வுகளை மேம்படுத்துவதிலும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தொடர்ந்து கொண்டிருக்கும் தளராத அர்ப்பணிப்பை நான் நெஞ்சார பாராட்டுகிறேன். இது போன்ற பயனளிக்கும் முன்னெடுப்புகள் மருத்துவர்களின் திறனை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைக்கும் நம் அனைவரது கனவிற்கும் வலு சேர்க்கிறது.” என்று கூறினார்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். அஸ்வின் அகர்வால், இந்த இரு நாள் கல்வி திட்ட தொடக்கவிழாவில் பேசுகையில், “கண் மருத்துவ கல்வியில் மாறிவரும் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒவ்வொரு ஆண்டும் கல்பவிருக்ஷா திட்டத்தை நாங்கள் நிகழ்நிலைப்படுத்தி மெருகேற்றுகிறோம். இந்த தொடர் மருத்துவ கல்வித் திட்டத்தில் நேரடி பயிற்சி திட்டங்களான வெட் லேப்ஸ், கலந்துரையாடும் அமர்வுகள் மற்றும் நோயாளிகளுக்கான நேரடி சிகிச்சையுடன் விளக்க உரைகள் ஆகியவை இடம்பெறுவதால் தங்களது திறன்களையும், அறிவையும் எதிர்கால கண் மருத்துவ நிபுணர்கள் கூர்மைப்படுத்துவதற்கு ஒரு சிறப்பான செயல்தளமாக இது அமைகிறது. கோட்பாடு ரீதியான தெளிவையும் மற்றும் மருத்துவ சிகிச்சை செயல்முறைகளில் நடைமுறை சார்ந்த பரிச்சயமும் மாணவர்களுக்கு கிடைப்பதை இத்திட்டம் உறுதி செய்கிறது. இத்துறையில் முன்னணி நிபுணர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புடன் நேரடி கலந்துரையாடல்களில் ஈடுபடவும் மாணவர்களுக்கு உதவும் கல்பவிருக்ஷா, அர்த்தமுள்ள வழிகாட்டுதல்களைப் பெறும் தனித்துவமான கல்வித்திட்டமாக திகழ்கிறது. மருத்துவ நேர்வுகளை விவாதிக்கவும் மற்றும் அது பற்றி விளக்க உரையுடன் சமர்ப்பிக்கவும் மாணவர்களுக்கு ஆலோசனை குறிப்புகளையும் நிபுணர்கள் வழங்குகின்றனர். 35 – க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 300-க்கும் கூடுதலான மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று கூறினார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக கண் சிகிச்சையிலும் மற்றும் கல்வியிலும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, முன்னோடி செயல்பாட்டுடன் முதன்மை வகித்து வருகிறது. இந்தியாவெங்கிலும் மற்றும் ஆப்ரிக்காவிலும் 250+ கண் சிகிச்சை மையங்களுடன் இக்குழுமம் கண் மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. கல்பவிருக்ஷா போன்ற தனித்துவமான திட்டங்கள் வழியாக மருத்துவ சேவையின் நேர்த்தியை மேம்படுத்தவும் மற்றும் கண் மருத்துவத்தில் அடுத்த தலைமுறை நிபுணர்களை வளர்த்தெடுப்பதற்குமான தனது செயல்திட்டத்தை இக்குழுமம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
