
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நான்கு அல்லது ஐந்து தொகுதிகளில்
வெற்றி பெறுவோம் என்று தற்போதுள்ள அதிமுக தலைமை உற்சாகமாக இருந்த நிலையில் தேர்தலுக்கு பின் வந்த ரிபோர்ட் பாசிட்டிவ்வாக இல்லை என்றும்
வெற்றி வாய்ப்பு இருந்த தொகுதிகளில் கூட சரியாக வேலை செய்யாத மாவட்ட நிர்வாகிகளால் வெற்றி வாய்ப்பு மூன்றாவது இடத்துக்கு தள்ளிப்போனதால்
எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் யாரெல்லாம் தேர்தல் வேலை சரியாக பார்க்கவில்லை? யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இல்லை என்ற லிஸ்ட் வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் தற்போது அந்த லிஸ்ட் எடுக்கும் பணியில் அதிமுக நிர்வாகிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவு வெளியானதும் அமைப்பு ரீதியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்த ஆய்வு செய்துவரும் நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான விகே சசிகலா, அதிரடியாக களத்தில் இறங்கி அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு அணிகளில் இருந்தும் தனது ஆதரவாளர்களைத் தேடி வருகிறார்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கே ஆட்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும்
அதனால் இந்த லிஸ்ட் தங்களை எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும்
அதே அதிமுக நிர்வாகிகள் கூறி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.