மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி

மத்திய அரசுடன் இணைந்து, “நமோ ட்ரோன் திதி யோஜனா” திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றுவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷ்யாம்குமார் தெரிவித்துள்ளார்.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

இது குறித்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸ் அலுவலகத்தில் அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரி  ஷ்யாம்குமார், மற்றும் குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரோன் மூலமாக விவசாய துறையில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி வருவதாக தெரிவித்தார். மேலும், விவசாயத்தில் அறிவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் தேவைகளை மிக எளிதாக பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்தார்.  

இந்நிலையில், மத்திய அரசுடன் இணைந்து “நமோ ட்ரோன் திதி யோசனா” திட்டத்தின் மூலமாக இந்தியாவில் சுமார் 1000பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என தெரிவித்தார். அதில் தென்னிந்தியாவிலிருந்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக சுமார் 446 ட்ரோன்கள் வழங்க இருக்கிறது. அது மட்டுமல்லாது சுமார் 500 நபர்களுக்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏற்கனவே ட்ரோன் பயிற்சி அளித்துள்ளது என்றார். மேலும், தற்போது வழங்க இருக்கும் இந்த பயிற்சி மூலமாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11 இடங்களில், 1000 ட்ரோன்களை பிரதமர் ட்ரோன்களை வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்றார்.தற்போது, கருடா ஏரோஸ்பேஸ் மூலமாக சென்னையை அடுத்த நாவலூர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.முதற்கட்டமாக அவர்களுக்கு அக்ரி ட்ரோன் மூலமாக ஸ்பிரே எவ்வாறு தெளிக்கப்படுகிறது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

இந்த பயிற்சிக்கு அவர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  பாஸ்போர்ட் அல்லது பேன்கார்டு அல்லது  அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்,எந்தவித கட்டணமும் கிடையாது,முற்றிலும் இலவசம் என குறிபிட்டார்.இந்த வாய்ப்பின் மூலம் பெண்களும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக பார்க்கப்படுவார்கள் என்றார்.

தற்போது கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக, மேரி, லட்சுமி தேவி, ஜோதி மற்றும் சுனிதா ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

கருடா ஏரோஸ்பேஸ் மூலமாக பயிற்சி பெற்று வரும் மேரி என்பவர் கூறுகையில், எங்களுக்கு தயக்கமாக இருந்தாலும், ட்ரோனை கையாளுவது, தொழில்நுட்பத்தை எளிதாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது போன்று பயிற்சி வழங்கப்பட்டது என்றார். தற்போது தைரியமாக நாங்களும் தொழில்நுட்பத்தை கையாள்வோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மெட்ரோபோலிஸ் MedEngage திட்டம்மூலம் 301 மருத்துவமாணவர்களுக்குஆராய்ச்சிஉதவித்தொகையாகமொத்தம் INR 1.7 கோடியைவழங்குகிறது.
Next post காமி விமர்சனம் தமிழ்
Close
%d bloggers like this: